“கேமரா முன்னாடி மட்டும்தான் உங்க ரத்தம் கொதிக்குமா?” பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி!
டெல்லி: "கேமராக்கள் முன்னால் மட்டும் உங்கள் ரத்தம் ஏன் கொதிக்கிறது?" என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி உணர்ச்சி பொங்க உரையாற்றினார். 'பெண்கள் நெற்றியில் இருக்கும் குங்குமம் வெடிமருந்தாக மாறியது. என் நரம்புகளில் ரத்தத்திற்கு பதிலாக குங்குமம் பாய்கிறது." என உணர்ச்சிகரமாகப் பேசினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி ஆவேச பேச்சு
பிரதமர் மோடி பேசுகையில், "பழிவாங்குவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்படவில்லை. தர்மத்தை காப்பதற்காகவே அது தொடங்கப்பட்டது. இது தான் பயங்கரவாதத்தை அழிக்கும் வழி. இது தான் இந்தியா; புதிய இந்தியா. தாய்மார்களின் நெற்றியில் இருந்து செந்தூரத்தை அழித்தவர்கள், தற்போது மண்ணோடு மண்ணாக பஸ்பமாகியுள்ளனர். இந்திய மக்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "பாரத மாதாவின் சேவகனான இந்த மோடி நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை.. சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது. என் நரம்புகளில் கொதிக்கும் குங்குமம் பாய்கிறது" எனப் பேசினார் பிரதமர் மோடி.
ராகுல் பாய்ச்சல்
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்.பி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி பேசிய வீடியோவை பகிர்ந்து, "கேமராக்கள் முன்னால் மட்டும் உங்கள் ரத்தம் ஏன் கொதிக்கிறது?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
கேமரா முன்னாடி மட்டும்தானா?
ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு இந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..
1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்?
2. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?
3. கேமராக்கள் முன்னால் மட்டும் உங்கள் ரத்தம் ஏன் கொதிக்கிறது?
இந்தியாவின் கௌரவத்தை நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டீர்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பிரதமர் மோடி, "என் நரம்புகளில் ஓடுவது வெறும் ரத்தம் மட்டுமல்ல, அது சிந்தூர்" எனப் பேசியதை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில், "உயிரியல் அல்லாத மரபணுக்கள் காரணமாக இருக்கலாம்" என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதியால் இந்த ஒரு தோல்வியையே தாங்க முடியலையா? ராகுல் மீது ஏன் வன்மம்? மாணிக்கம் தாகூர் கேள்வி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications