ஓபிசி பிரதிநிதித்துவம் எங்கே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போ? விடாமல் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி!
டெல்லி: 10 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்பதில் பாஜகவின் மிகப் பெரும் சதி இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகவும் சிறப்புக்குரியது. ஆனால் அதில் இரண்டு விஷயங்கள்தான் முக்கியமானவை. ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு; மற்றொன்று தொகுதி மறுசீரமைப்பு.

உண்மையில் மகளிர் இடஒதுக்கீட்டை இன்றே அமல்படுத்துவது என்பது பெரும் சிக்கலான விஷயம் அல்ல. இன்றே அதனை நடைமுறைப்படுத்தவும் முடியும். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை செய்யவும் விரும்பவில்லை.
நாட்டு மக்கள் முன்பாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றிவிட்டது பாஜக அரசு. ஆனால் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகாலம் ஆகும் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் மகளிர் இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வருமா? வராதா? என்பது யாருக்கும் தெரியாது. இது மக்களை திசைதிருப்புகிற மோசமான நடவடிக்கை.
இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி OBC). ஆனால் மத்திய அரசு அதிகாரங்களில் பெரும்பான்மையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்களாக இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசு செயலாளர் பதவிகளில் 90-ல் 3 பேர் மட்டுமே இதர பிற்படுத்தபப்ட்ட வகுப்பினர். ஓபிசி குறித்து எப்போதும் பேசும் பிரதமர் மோடி அவர்களது முன்னேற்றத்துக்கு செய்ததுதான் என்ன? மகளிர் இடஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு உள் இடஒதுக்கீடு அவசியம். ஆனால் மத்திய பாஜக அரசு இதனை மறுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 5% மட்டுமே ஓபிசியினர் பங்கு. பெரும்பான்மை நிதியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் ஆதிக்க ஜாதியினரிடமே இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு- பாஜகவின்
இதற்காக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுபு நடத்தப்பட வேண்டும். ஒவொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே அடையாளப்படுத்த முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஓபிசி மக்களுக்கான உரிமையை பெற முடியும். இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்பவே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications