டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனா ஊடுருவல்- பேச அனுமதி மறுப்பு- பாதுகாப்புக்கான நாடாளுமன்ற கூட்டத்தில் இருந்து ராகுல் வெளிநடப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா ஊடுருவல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாதுகாப்பான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநடப்பு செய்தார்.

டெல்லியில் பாஜக எம்பி ஜூயல் ஓரம் தலைமையில் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

Rahul walks out of Defence Parliament panel meeting

இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் முன்னிலையில் ராணுவத்தினரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி குறுக்கிட்டார்.

அப்போது, ராணுவ சீருடை குறித்து எல்லாம் விவாதித்து நேரத்தை வீணடிக்காதீர்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து இங்கே விவாதிக்கலாம். லடாக் எல்லையில் சீனாவின் ஊடுருவலை எதிர்கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் குறித்து பேசுவோம் என்றார் ராகுல் காந்தி.

ஆனால் ராகுல் காந்தியை பேசுவதற்கு ஜூயல் ஓரம் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ராகுல் காந்தி, இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் காங்கிரஸின் ராஜீவ் சாதவ், ரேவந்த் ரெட்டி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

English summary
Senior Congress leader Rahul Gandhi today walked out of a Defence Parliament panel meeting in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X