நாடு முழுவதும் உயரும் ரயில் டிக்கெட் கட்டணம்.. ஜூலை 1 முதல் அமல்! எவ்வளவு உயர்கிறது?
டெல்லி: இந்தியாவில் பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. இதற்கிடையே வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே துறை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் வகுப்பு, எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் பொது போக்குவரத்தில் ரயில்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது, டாய்லெட் வசதி, நீண்ட தூரப் பயணங்களுக்கு பெர்த் என பல்வேறு வசதிகளும் இருப்பதால் மக்கள் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள். டிக்கெட் விலை குறைவாக இருப்பதும் மக்கள் ரயில்களைத் தேர்வு செய்ய மற்றொரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு
இதற்கிடையே இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண கட்டமைப்பை மாற்றி அமைக்கவுள்ளதாக.. அதாவது டிக்கெட் விலையை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் உயரப் போவதில்லை. அதேநேரம் தொலைதூரப் பயணங்கள் மற்றும் ஏசி வகுப்புகளுக்கு டிக்கெட் விலை உயர்கிறது.
நீங்கள் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், உங்கள் பயணம் 500 கி.மீ வரை இருந்தால், கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ரயில் டிக்கெட் உயர்வு இல்லை. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.
எவ்வளவு உயர்கிறது
ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும். இது சிறியதாகத் தோன்றினாலும் நீண்ட தூரம் பயணிப்போருக்கு தங்கள் கட்டணம் கணிசமாகவே உயர்ந்து இருக்கும்.
ஏசி கோச்கள்
மறுபுறம் ஏசி வகுப்புகளுக்கும் அதாவது, ஏசி சேர் கார், ஏசி 3-டயர், 2-டயர் அல்லது முதல் வகுப்பு ஏசி என எல்லா ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. இதுவும் 500 கிமீ மேல் தூரம் கொண்ட பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 1,000 கி.மீ பயணத்திற்கு, நீங்கள் முன்பு செலுத்தியதை விட ரூ.20 அதிகமாகச் செலுத்த வேண்டும்.
யாருக்குக் கட்டண உயர்வு இல்லை
புறநகர் ரயில் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. புறநகர் ரயில் சேவைகளை (சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட புறநகர் ரயில்கள்) டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை. புறநகர் டிக்கெட் விலை அமைப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதால் இதே கட்டணம் தான் தொடரும்.
அதேபோல அலுவலகம் அல்லது பள்ளிக்குச் சென்று வர மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை (பயன்படுத்துவோருக்கும் டிக்கெட் விலை உயராது. தினமும் சீசன் டிக்கெட்டுகளை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு இது ஒரு பெரிய நிம்மதியைத் தருகிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications