டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் .. 54000 டிக்கெட்டுகள் முன்பதிவு.. இந்திய ரயில்வே தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கான பயணிகள் ரயில் போக்குவரத்து மே 12 முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் இன்று துவங்கி உள்ளது. சுமார் 54 ஆயிரம் பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். பலர் டிக்கெட் கிடைக்கால் ஏமாற்றம் அடைந்தனர்.

Recommended Video

    மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு

    கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    Railways to restart passenger trains from tomorrow- Online booking starts today

    ஆனால் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்கிற சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுனில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.

    மேலும் பிற மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1-ந் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் பல மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனிடையே பயணிகள் ரயில் போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 15 நகரங்களுக்கு முதல் கட்டமாக நாளை முதல் ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து இவை இயக்கப்பட்டு பின்னர் டெல்லியை சென்றடையும்.

    Railways to restart passenger trains from tomorrow- Online booking starts today

    இந்த ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் மட்டும் பதிவு செய்ய முடியும். இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 5 மணிவரையான பிறகும் டிக்கெட் புக்கிங் நடக்காமல் இருந்தது.

    தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு- இயல்பு நிலை திரும்புகிறது- டீ கடைகளும் திறப்பு தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு- இயல்பு நிலை திரும்புகிறது- டீ கடைகளும் திறப்பு

    இதுகுறித்து ஐஆர்சிடிசி விளக்கம் அளித்தது. சிறப்பு ரயில்கள் குறித்த அட்டவணையை பதிவேற்றம் செய்ததில் தாமதம் ஏற்பட்டதாகவும், மாலை 6 மணிக்கு, ரயில்வே புக்கிங் தொடங்கும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்தது. ஆனால் 7 மணிவரையிலும் கூட எந்த டிக்கெட்டையும் புக் செய்ய முடியவில்லை. மக்கள் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குமுறினார்கள்.. சர்வர் முடங்கிவிட்டதால், இந்த நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரியவந்தது. ஒரு வழியாக ரயில்களில் இரவு 9 மணி அளவில் முன்பதிவு நடந்தது 9.15 மணிக்குள் சுமார் 54 ஆயிரம் பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். சுமார் 30000 பிஎன்ஆர்கள் உருவாக்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்தது. ஆனால் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    English summary
    Indian Railways to restart passenger train operations from Tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X