ராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைவர் ஜேபி நட்டாவை, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் எந்த நேரமும் ராஜஸ்தானில் ஆட்சி கவிழலாம் என்ற நிலை ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.

 Rajasthan politics: sources says, Sachin Pilot likely to meet BJP chief JP Nadda on today

சச்சின் பைலட் முதல்வர் கெலாட் மீது அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் சச்சின் பைலட் தற்போது எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கெலாட், தங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டினார் . அத்துடன் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார்.

இதற்கிடையே அதிருப்தியில் இருந்த துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 35 எம்எல்ஏக்கள் வரை சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. சச்சின் பைலட் முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு தரப்படவில்லை. அப்போது முதலே கட்சியிலும் ஆட்சியலும் அதிகார மோதல் நிலவியதாககூறப்படுகிறது.

இந்த மோதல் முற்றிய நிலையில் இப்போது சச்சின் பைலட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் மத்திய பிரதேசம் பாணியில் ராஜஸ்தானில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இன்று காலை 10.30மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+