12 ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து இல்லை- வெங்கையா நாயுடு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக லோக்சபாவில் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் 12 பேர் நேற்று நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

டெல்லியில் ஆலோசனை
இதற்கு 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இன்று காலையில் டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

லோக்சபாவில் அமளி- ஒத்திவைப்பு
இதனிடையே இன்று காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடங்கின. லோக்சபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதர எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை சபாநாயகர் ஓம்பிர்லா அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அமளி தொடரவே சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

வெங்கையா நாயுடு மறுப்பு
ராஜ்யசபாவில் பேசிய சபை தலைவர் வெங்கையா நாயுடு, மழைக்கால கூட்டத் தொடரில் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டது வருத்தம் தரக் கூடியது என வேதனையை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக வெங்கையா நாயுடுவை அவரது அறையில் சந்தித்து பேச இருக்கிறோம் என கூறினார். ஆனால் வெங்கையா நாயுடுவோ, 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்ய முடிவில் எந்த மாற்றமும் இல்லை; சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

ராஜ்யசபாவில் வெளிநடப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இதனால் ராஜ்யசபாவிலும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 2-வது நாளிலும் இரு சபைகளிலும் அமளி தொடருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications