டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக ஆதரவு வேட்பாளரை தோற்கடித்த காங்கிரஸ்.. கர்நாடகாவில் ஜேடிஎஸ் தோல்வி.. பரபர ராஜ்ய சபா முடிவுகள்!

Google Oneindia Tamil News

டெல்லி : மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. 1 இடத்தை பாஜக வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல, கர்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நான்காவது எம்.பி சீட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வென்றுள்ளார்.

யார் பி டீம்? மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலில்.. பாஜகவை அதிர வைத்த ஓவைசி.. பரபர மூவ்! நடந்தது என்ன? யார் பி டீம்? மகாராஷ்டிரா ராஜ்ய சபா தேர்தலில்.. பாஜகவை அதிர வைத்த ஓவைசி.. பரபர மூவ்! நடந்தது என்ன?

 ராஜ்ய சபா தேர்தல்

ராஜ்ய சபா தேர்தல்

மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று நாடு முழுவதும் இன்று தேர்தல் நடைபெற்றது. 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணி முதல் நடைபெற்றது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகிய மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக சார்பில் கன்ஷியாம் திவாரி போட்டியிட்டார். ஐந்தாவது வேட்பாளராக பாஜக ஆதரவுடன் பிரபல ஊடக உரிமையாளர் சுபாஷ் சந்திரா களத்தில் இருந்தார். 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்போது 5 பேர் களத்தில் இருந்ததால் தங்களது கட்சி எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு ஆதவராக வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சத்தால், சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர்.

காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 3 இடங்களையும், பா.ஜ.க 1 இடத்தையும் கைப்பற்றின. பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக நின்ற சுபாஷ் சந்திரா தோல்வியடைந்தார். ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ ஷோபாராணி குஷ்வா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் ஆளும் பாஜக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரை வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியையும் களமிறக்கின. 4 இடங்களுக்கான தேர்தலில் 6 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

 4வது எம்பி

4வது எம்பி

பாஜக சார்பில் இருவரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெறுவது உறுதியானது. 4-வது எம்.பி. பதவி யாருக்கு என்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 4-வது எம்.பி பதவியை பெறுவது தொடர்பாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே பெரும் போட்டி நடைபெற்று வந்தது. இறுதியில், கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார். ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திரா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

English summary
Congress has won three of the four Rajya Sabha seats in Rajasthan. One seat has gone to the BJP. In Karnataka, three seats have gone to the BJP and one to the Congress in Rajya sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X