ஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு ராஜ்யசபா அஞ்சலி
டெல்லி: ஓமன் நாட்டின் சுல்தானாக விளங்கிய ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்துக்கு, ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.
அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவர் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத். அவர் கடந்த மாதம், தனது 79வது வயதில் உயிரிழந்தார்.

ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தவர்.
இவர் ஓமன் மன்னராக பதவிக்கு வந்தபோது, ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது. ஆனால் ஓமனை அப்படி மாற்றினார்.
எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எண்ணெய் வளத்தை மூலதனமாக்கினார். நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை ஓமனில் ஏற்படுத்தினார்.
இவரது மறைவுக்கு ராஜ்யசபா இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோருக்கும் ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.












Click it and Unblock the Notifications