பொது சிவில் சட்டம்- சட்ட ஆணையம் கருத்து கேட்டது எதற்கு தெரியுமா? வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்!
டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகளிடம் சட்ட ஆணையம் ஒரு மாத காலம் கருத்து கேட்டது. இப்பொது சிவில் சட்டம் தொடர்பாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் கருத்து தெரிவித்த திமுக, , இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடிப்படையில் அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை திமுக ஆதரித்து வந்துள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் உருவாகும். எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்பு சட்டம் வழங்கிய தனிநபர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சி என்பதால், பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. இதை அமல்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையது அல்ல. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற கூடாது. இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பின் சட்டப் பிரிவுகளை மீறுவதாக திமுக பார்க்கிறது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதாவது பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையம் அண்மையில் புதிய ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளதா? பொது மற்றும் மத அமைப்புகளிடமிருந்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய கருத்துக்களைக் கேட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள்என்ன? பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும்போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன? அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? ஆகிய கேள்விகளை வைகோ கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கையில், இந்தியாவின் 21ஆவது சட்ட ஆணையம் 31.08.2018 அன்று "குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்" குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, 22ஆவது சட்ட ஆணைம், 14.06.2023 அன்று மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது என விளக்கம் அளித்தார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications