பணிவு - கருணை கொண்ட நல்ல மனிதர்.. ரத்தன் டாடா மறைவால் உடைந்துபோன மோடி..ராகுல் - ஸ்டாலின் இரங்கல்
டெல்லி: ரத்தன் டாடா மறைவை தொடர்ந்து அவர் அன்பு, கருணை கொண்ட நல்ல மனிதர்.. தொலைநோக்கு பார்வை கொண்ட தொழிலதிபர் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளதோடு, குஜராத் முதல்வராக இருந்தபோது ரத்தன் டாடாவுடன் நடந்த சந்திப்பு பற்றிய உருக்கமான விஷயங்களை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினும் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ரத்தன் டாடா மறுத்தார்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தொழிலதிபர். அதேவேளையில் இரக்க குணம் கொண்ட அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமைமிக்க நிறுவனத்துக்கு அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். அதேவேளையில் அவரது பங்களிப்பு என்பது போர்டு ரூமை தாண்டியதாக இருந்தது.
அவரது பணிவு, கருணை, நமது சமுகத்தை மேம்படுத்தும் வகையில் இருந்தது. ரத்தன் டாடாவின் தனித்துவமான பண்பு என்னவென்றால் பெரிய கனவுகளை கொண்டிருந்தார். கல்வி, சுகாதாரம், விலங்குகளின் நலன்களின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ரத்தன் டாடாவை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசி கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். அவருடைய விஷன் எப்போதும் செழுமையாகவே இருந்தது. நான் பிரதமரான பிறகும் கூட எங்கள் இருவருக்கும் இடையேயான தொடர்பு என்பது தொடர்ந்து வந்தது. அவரது மறைவு இப்போது எனக்கு வேதனையை தருகிறது. இந்த துக்கமான நேரத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கிறது. ஓம் சாந்தி'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‛‛ரத்தன் டாடா தொலைநோக்கு கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் நன்கொடை கொடுத்து உதவுவது என இரண்டு வகைகளிலும் முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்ப்ததினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛ இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்ன் மற்றும் பணிவு, இரக்கத்தின் ஒளி விளக்காக திகழ்ந்த ரத்தன் டாாடவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அவரது தொலைநோக்கு பார்வை என்பது டாடா குழுமத்துக்கு மட்டுமின்றி, உலகளாவிலய வணிக நடைமுறைகளுக்கான அளவுகோலாக அமைந்தது. நாட்டை கட்டியெழுப்புவது, புதிய கண்டுபிடிப்புகள் மீதான அவரது தொடர் ஈடுபாடு, கொடைத்தன்மை என்பது மில்லியன் கணக்கான உயிர்களால் அழியாத வகையில் உள்ளது.
இந்தியா ஒரு ஜியாண்டை இழந்துவிட்டது. ஆனால் அவரது லீகஸி என்பது வருங்கால சந்ததினருக்கு ஊக்கமாக இருக்கும். அவரை இழந்து வாழும் குடும்பத்தினர், சக ஊழியர்கள் உள்பட டாடா குழுமத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications