ஆஹா.. இப்படி ஒரு காரணமா? குடியரசு தினவிழாவில் கவனம்பெற்ற பிரதமர் மோடியின் தலைப்பாகை! கவனிச்சீங்களா
டெல்லி: டெல்லியில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பல வண்ணங்களில் அவர் அணிந்த தலைப்பாகையின் பின்னணியில் உள்ள சூப்பரான விஷயம் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பிறகு அவர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு கண்டு ரசித்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி பங்கேற்றார்.

கவனம் ஈர்த்த பிரதமரின் தலைப்பாகை
மேலும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அந்த இடத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக, சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அவர் அணியும் ஆடைகள் அதிக கவனம் பெறும். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று அணிந்திருந்த தலைப்பாகை அதிக கவனம் பெற்றது.

கவனம் பெற்ற தலைப்பாகை
இன்றைய குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி கருப்பு வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தார். வெள்ளை நிற குர்தா, பேன்ட் அணிந்திருந்த பிரதமர் மோடி குர்தாவின் மீது கருப்பு நிற கோட் அணிந்திருந்தார். மாறாக அவரது தலைப்பாகை மட்டும் பல வண்ணங்களில் இருந்தது. இது பார்க்க பளிச்சென இருந்ததோடு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தான் பல வண்ணங்களில் பிரதமர் மோடி தலைப்பாகை அணிந்ததன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

காரணம் என்ன?
அதாவது அவர் அணிந்திருந்த தலைப்பாகை ராஜஸ்தானி தலைப்பாகை வகையை சேர்ந்தது. நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ராஜஸ்தானி தலைப்பாகையில் பல வண்ணங்கள் இருக்கும் வகையில் இடம்பெற செய்து பிரதமர் மோடி அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது அதிகளவில் இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மோடி.. மோடி.. கோஷம்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மரபுப்படி தேசிய போர் நினைவிடத்துக்கு சென்று நாட்டுக்காக வீரமரணம் அடைந்தவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தின் டிஜிட்டல் பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி தனது கருத்துக்களை பதிவிட்ட பிறகு குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு பிரதமர் மோடி தனது கார் கதவை திறந்து பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் ‛பாரத் மாதே கி ஜே.. பிரதமர் மோடி.. மோடி.. மோடி..' என கோஷமிட்டனர் னெ்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை என்ன நடந்தது?
முன்னதாக கடந்த ஆண்டு பிரதமர் மோடி உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அந்த தொப்பி உத்தரகாண்ட் மாநில மலரான பிரம்மகமலத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள கோவிலுக்கு பிரதமர் மோடி செல்லும்போதெல்லாம் பிரம்மகமலம் மலரை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்தார் என்ற நிலையில் கடந்த ஆண்டு அவரது தொப்பி அதிக கவனம் பெற்றது. தற்போது பிரதமர் மோடியின் ராஜஸ்தானி வகை தலைப்பாகை கவனம் ஈர்த்துள்ளது
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications