டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,51,718 கோடி; தமிழகத்தின் வரி வருவாய் எவ்வளவு?

Google Oneindia Tamil News

டெல்லி: அக்டோபர் மாதம் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,51,718 கோடி எனவும் தமிழகத்தின் வரி வருவாய் மட்டும் ரூ9,540 கோடி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு கூறியுள்ளதாவது: அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது.

அதிக வருவாய் ஈட்டிய மாதம்

அதிக வருவாய் ஈட்டிய மாதம்

இதன் மூலம், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும். மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தின் வருவாய் எவ்வளவு?

தமிழகத்தின் வருவாய் எவ்வளவு?

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அக்டோபர் 2022க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது.

செப்டம்பர் நிலவரம்

செப்டம்பர் நிலவரம்

2022 செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,47,686 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,271 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடி, ஐஜிஎஸ்டி ரூ 80,464 கோடி (சரக்குகளின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ. 41,215 கோடி உள்பட ). செஸ் வசூல் ரூ 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ 856 கோடி உட்பட).

செப்டம்பர் பங்கு பிரிப்பு

செப்டம்பர் பங்கு பிரிப்பு

ஐஜிஎஸ்டி-யிலிருந்து சிஜிஎஸ்டி-க்கு ரூ.31,880 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு ரூ.27,403 கோடியும் வழக்கமான முறையில் அரசாங்கம் வழங்கியுள்ளது. செப்டம்பர் 2022 இல் வழக்கமான செட்டில்மென்டுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டி- க்கு ரூ.57,151 கோடியும், எஸ்ஜிஎஸ்டி- க்கு ரூ.59,216 கோடியும் ஆகும்.

 செப்டம்பரில் தமிழகம்

செப்டம்பரில் தமிழகம்

2022 செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 39% அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து கிடைத்த வருவாயை விட 22% அதிகமாகும். தமிழகத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் ரூ.8637 கோடியாகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட 10% அதிகமாகும். இதேபோல, புதுச்சேரியிலிருந்து ரூ.188 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 18% அதிகம் ஆகும்.

English summary
The gross GST revenue collected in the month of October 2022 is Rs 1,51,718 crore of which CGST is Rs 26,039 crore, SGST is Rs 33,396 crore, IGST is Rs 81,778 crore (including Rs 37,297 crore collected on import of goods) and Cess is Rs 10,505 crore (including Rs 825 crore collected on import of goods), which is second highest till date.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X