சீனுக்கு வந்த ஆர்எஸ்எஸ்..! விவசாய சட்டங்கள் ரத்து! மோடி பின்வாங்கியதன் பின்னணி!
டெல்லி: மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசின் முடிவு பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீடித்த விவசாயிகள் போராட்டம் சமூக ஒற்றுமையை மோசமாக பாதிக்கிறது என்பதால் ஆர்எஸ்எஸ் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
விவசாயச் சட்டங்களை சங் அமைப்புகள் முழுவதுமாக எதிர்க்கவில்லை அல்லது அவற்றை ரத்து செய்யும் யோசனையையும் ஆதரிக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் மோடி அரசு சரியாக செயல்படவில்லை என்பதில் தங்களுக்கு அதிருப்தி இருப்பதை அரசுக்கு சுட்டிக் காட்டிதான் வந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள்
இதுபற்றி ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் கூறியதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. அது இதுதான்- தொடர்ச்சியான போராட்டங்கள், பல விவசாயிகளின் மரணம் மற்றும் லக்கிம்பூர் கேரி சம்பவங்கள் ஆர்எஸ்எஸ்சை அதிருப்தியடையச் செய்தன.

சீக்கியர்கள், ஜாட் முக்கியம்
சீக்கியர்கள் மற்றும் ஜாட் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உ.பி.யில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் லக்கிம்பூர் கெரி சம்பவத்தின் எதிர்மறையான தாக்கம் இருக்கப் போகிறது என்பது களத்திலிருந்து வந்த தகவல். தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடனான எங்கள் சந்திப்புகளின் போது, தேர்தல் பிரச்சாரங்களில் சீக்கியர்கள் மற்றும் ஜாட்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் கூறியுள்ளோம், "என்று மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.

பஞ்சாப் பிரிவினை
விவசாய சட்டங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் சீக்கியர்களுக்கும் இடையில் மோதல் பெரிதாகிக் கொண்டே போவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. கடந்த ஒரு வருடத்தில் சீக்கியர்கள் தங்களை அந்நியமாக உணரத் தொடங்கியுள்ளனற். இதை பற்றி ஆர்எஸ்எஸ் கவலைப்படுகிறது. 1980 களில் பஞ்சாபில் ஏற்பட்ட பிரிவினைவாத எண்ணங்களை தடுக்க உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலான பிளவு விரிவடைந்ததை குறைக்க ஆர்எஸ்எஸ் அப்போதே நிறைய பணிகளைச் செய்தது, " என்று மற்றொரு மூத்த ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் கூறியுள்ளார்.
Recommended Video

பாரதிய கிசான் சங்கம்
இதற்கிடையில், விவசாயிகளின் பிரச்சினைகளைக் கையாளும் ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான பாரதிய கிசான் சங்கம் எப்போதும் விவசாயச் சட்டங்களை ஆதரித்து வந்துள்ளது. ஆனால் முழு அளவில் ஆதரிக்கவில்லை. 2020 இல், விவசாயிகளின் விளைபொருட்கள் மற்றும் விலை உறுதி தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக,பாரதிய கிசான் சங்கம், தற்போதைய வடிவத்தில் உள்ள மசோதாக்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று கூறியதுடன், உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைகளுடன் சட்டங்களை இணைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும், இரண்டு மசோதாக்களும் அதன் பரிந்துரைகளை இணைக்காமல் நிறைவேற்றப்பட்டன. எனவே பாரதிய கிசான் சங்கம் அதிருப்தியில்தான் இருந்தது.












Click it and Unblock the Notifications