"விதிகள் உருவாக்கினால் மட்டும் போதாது.. " தெரு நாய்களை மொத்தமாக அகற்றும் வழக்கில் சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து அவற்றைக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இருப்பினும், இதை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளைக் கூறினர்.
நாட்டில் கடந்த சில காலமாக நாய்க்கடி புகார்கள் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் ரேபிஸ் பாதிப்பும் ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தெருநாய் பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாகப் பல்வேறு தரப்பினரும் புகாரளித்து வருகிறார்கள்.

நீதிபதிகள் உத்தரவு
இதற்கிடையே இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜேபி பார்திவாலா, நீதிபதி மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அடுத்த 8 வாரங்களில் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தெருநாய்களையும் பிடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், நாய்களுக்குத் தங்குமிடங்களை அமைக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், நாய்களுக்கா குரல் கொடுப்போர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்குப் பொறுப்பேற்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். தெருநாய்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளை நாம் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்ற நீதிபதிகள், நாய் பிரியர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினர் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படாது எனத் தெரிவித்தனர். இந்த உத்தரவு நாடு முழுக்க முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இன்று விசாரணை
இதற்கிடையே நேற்றைய தினம் தலைமை நீதிபதி கவாயிடம் இது தொடர்பாக முறையிடப்பட்டது. தெருநாய்கள் விவகாரத்தில் முன்பு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவுக்கு நேர்மாறாக இந்த உத்தரவு இருப்பதாக முறையிடப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி கவாய் இந்த விவகாரத்தைக் கவனிப்பதாகக் கூறினார்.
தலைமை நீதிபதி கவாய் அறிவுறுத்தல் பெயரில் இந்த வழக்கை இப்போது மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
டெல்லி அரசு வாதம்
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டெல்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், தாங்கள் விலங்கு விரோதிகள் அல்ல என்றும் நாய்களைக் கொல்லுமாறு கோரவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், குழந்தைகள் வெளியே விளையாட முடியாததால், நாய்களை மனிதக் குடியிருப்புகளில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சட்ட விதிகள் மட்டும் இதற்குத் தீர்வாகாது என்றும், நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாய்கள் எங்கே போகும்
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நாய்களுக்குக் கருத்தடை செய்த பிறகு அவற்றை விடுவிக்கக்கூடாது என்ற உத்தரவு தற்போதுள்ள விதிகளுக்கு எதிரானது.. பிடித்துச் செல்லப்படும் நாய்களை வேறு எங்கு விடுவார்கள். அதிகக் கூட்டம் நிறைந்த இடங்களில் அடைக்கும்போது, அவை ஒன்றுக்கொன்று காயப்படுத்திக் கொள்ளக்கூடும். இது மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்" என்றார்.
இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், தெரு நாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரும் இடைக்கால மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. மேலும், தெரு நாய்கள் வழக்கின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றுடன் முடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. அவசர உத்தரவுகள் அல்லது தற்காலிகத் தடை ஏதேனும் தேவையா என்பதை மட்டுமே ஆராய்ந்து வருவதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
சுப்ரீம் கோர்ட காட்டம்
மேலும் நீதிபதிகள், "சட்டமன்றங்கள் இதற்கான விதிகளை வகுத்தாலும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்" என என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை உயர் நீதிபதி ஜே.பி. பர்திவாலா தனது உத்தரவில், "நாங்கள் இந்த நடவடிக்கையை எங்களுக்காக எடுக்கவில்லை.. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். எனவே, எந்தவித உணர்வுப்பூர்வமான கருத்துக்களுக்கும் இங்கே இடமில்லை. கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.. அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நாய்களைப் பிடித்து தற்காலிகமாக முகாம்களுக்கு மாற்ற வேண்டும்" என்றார்.
நிதி உள்ளதா?
இருப்பினும், அரசியல் தலைவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தெரு நாய்களைப் பிடித்து முகாம்களுக்கு மாற்றும் அளவுக்கு நமது நாட்டில் உள்கட்டமைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி வருகிறார்கள். குறிப்பாக பாஜகவின் மேனகா காந்தி, "டெல்லியில் சுமார் 4 லட்சம் தெருநாய்கள் உள்ளன. அவற்றை முகாம்களில் அடைக்க ரூ.15,000 கோடி ஆகும்.. இந்தத் தொகை டெல்லி அரசிடம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications