டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா - சீனா- ரஷ்யா இடையிலான ஆலோசனை கூட்டம் ஜூன் 22-ல் திட்டமிட்டபடி நடைபெறும்- புதிய திருப்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனா- ரஷ்யா இடையிலான மூன்று நாட்டு ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வரும் 22-ந் தேதி நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையிலான உறவு மொத்தமாக முறியும் நிலையில் இருக்கிறது. லடாக் பிரச்சனைக்கு பின் இரண்டு நாட்டு உறவு மீண்டும் சரியாக வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே வரும் ஜூன் 22ம் தேதி முக்கியமான ஆலோசனை கூட்டம் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

அதை மட்டும் விட்டுத்தர மாட்டோம்.. கல்வான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா.. பொங்கி எழுந்த இந்தியா! அதை மட்டும் விட்டுத்தர மாட்டோம்.. கல்வான் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா.. பொங்கி எழுந்த இந்தியா!

என்ன கூட்டம்

என்ன கூட்டம்

இந்தியா - ரஷ்யா - சீனா கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நாடுகள் சந்திப்பது எப்போதும் உலக அளவில் அதிக முக்கியத்துவம் பெற கூடியது ஆகும். இந்த நிலையில் ரஷ்யாவின் அழைப்பின் பெயரில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்தும், மூன்று நாட்டு உறவு குறித்தும், அமெரிக்கா குறித்தும் இதில் ஆலோசனைகள் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

சீனா- இந்தியா மோதல்

சீனா- இந்தியா மோதல்

ஆனால் அதற்குள் இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் தொடர்ந்து பிரச்னை அதிகரித்து வருகிறது. அங்கு இரண்டு நாட்கள் முன் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த மீட்டிங் நடக்குமா என்று கேள்வி எழுந்தது.

ரஷ்யாவின் ஆசை

ரஷ்யாவின் ஆசை

இந்த ஆலோசனை கூட்டம் மூலம் இந்தியா - சீனா இடையே சமாதானத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவிற்கு எதிராக இரண்டு நாடுகளையும் ஒன்று திரட்டலாம். இந்தியா - சீனா உறவை முறிக்கலாம் என்று ரஷ்யா நம்பியது.

மூன்று நாடுகளின் பாதுகாப்பு குறித்தும் ஒற்றுமை குறித்தும், இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை குறித்தும், அதில் அமெரிக்காவின் தலையீடு குறித்தும் பேசலாம் என்று ரஷ்யா நம்பியது.

இந்தியா மறுப்பு

இந்தியா மறுப்பு

ஆனால் இதற்கு இந்தியா கடுமையாக மறுப்பு தெரிவித்தது என முதலில் தகவல்கள் வெளியாகின. எல்லை பிரச்சனை குறித்து பேச வாய்ப்பே இல்லை. மூன்று நாட்டு உறவு குறித்து மட்டுமே பேச முடியும். லடாக் பிரச்சனை என்பது இரண்டு நாட்டு பிரச்சனை. இதில் ரஷ்யா தலையிட கூடாது என்று இந்தியா மிகவும் உறுதியாக குறிப்பிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்தியாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Russia - India - China meet postponed amid border tensions in Ladakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X