டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 வழிச்சாலை வழக்கு.. எங்கள் கருத்தையும் கேளுங்கள்.. பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது- வீடியோ

    டெல்லி: சேலம் 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.

    Salem 8 way project: PMK files Caveat in Supreme Court anticipating an appeal

    இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில்தான் நேற்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    பாமக சார்பாக பாமக இளைஞரணி தலைவர் எம்.பி அன்புமணி தொடுத்த மனுவும் இதில் மிக முக்கியம் ஆகும். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்த நிலையில் இதில் புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா!இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா!

    அதன்படி இதில் எப்போது வேண்டுமானாலும் தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விரைவில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம் 8 வழிச்சாலை வழக்கில் பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுதாரர் பாமக இளைஞரணி தலைவர் எம்.பி அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு இதில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று இவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    English summary
    Salem 8 way project: PMK files Caveat in Supreme Court anticipating the TN Govt. appeal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X