Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ600 கோடி பண மோசடி வழக்கு: தூதரக விலக்கு கோரிய சிவசங்கரன் மனுவை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூ600 கோடி பண மோசடி வழக்கில் தமக்கு தூதரக விலக்கு கோரிய சிவசங்கரன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செசல்ஸ் நாட்டின் தூதர் என்பதால் இவ்வழக்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சிவசங்கரன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஐ.டி.பி.ஐ. வங்கியில் சிவசங்கரன் ரூ600 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை சிவசங்கரன் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சிவசங்கரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

சிவசங்கரனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

இவ்வழக்கில் சிவசங்கரன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ்- தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கரன் வழக்கு தொடர்ந்தார். அதில், தாம் செசல்ஸ் நாட்டின் தூதர்; ஆகையால் எனது உரிமைகளைத் தடுக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

ஹைகோர்ட் டிஸ்மிஸ்

ஹைகோர்ட் டிஸ்மிஸ்

ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஒருநாட்டில் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பதாலேயே ஒருவரை தூதராகக் கருத முடியாது என கூறி சிவசங்கரன் மனுவை கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிவசங்கரன் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் சிவசங்கரன் சார்பாக மனீந்தர்சிங் ஆஜாரானார். அவர் தமது வாதத்தில், சிவசங்கரன் செசல்ஸ் குடியரசின் தூதுவர். வியன்னா ஒப்பந்தப்படி இந்தியாவில் அவர் மீது தொடரப்பட்ட குற்ற வழக்குகளில் இருந்து விடுபடும் உரிமை அவருக்கு உள்ளது என்றார். ஆனால் மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதனை கடுமையாக எதிர்த்தார். மேலும் சிவசங்கரன் மோசடி செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதனால்தான் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது என்றார்.

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சிவசங்கரன் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இதனை ஏற்க முடியாது. மோசடி வழக்குகளில் இருந்து தூதரக ரீதியாக விலக்கு கோரும் சிவசங்கரன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என தெரிவித்தனர். இதனால் சிவசங்கரன் தம் மீதான ரூ600 கோடி மோசடி வழக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+