டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் ஊரடங்கு- மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தக் கோரும் மனு மீது மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

SC refuses to pass immediate directions on lifting restrictions in J&K

ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை என்ன என்பது குறித்து வெளி உலகத்துக்கு தெரியவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு, 100க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தெஹ்சீன் பூனவல்லா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணக்கு வந்தது.

அப்போது, ஜம்மு காஷ்மீரில் இன்னமும் தொலைபேசி இணைப்புகள், இணைய இணைப்புகள் சீராக்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்படவில்லை என தெஹ்சீன் பூனவல்லா தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலிடம், நிலைமை சீராக இன்னும் எத்தனை காலமாகும் என நீதிபதிகள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மத்திய அரசைப் பொறுத்தவரையில் அந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் கூடாது; ஒருவரும் உயிரிழக்கக் கூடாது என்பதுதான். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராக எவ்வளவு காலமாகும் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் இதில் மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவும் முடியாது என கூறி வழக்கை 2வார காலங்களுக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

English summary
The Supreme Court today has refused to pass immediate directions on lifting restrictions in J&K.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X