விடுதலைக்காக போராடியவர்களை இப்படி பேசலாமா? சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கேள்வி
டெல்லி: நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை இப்படியா பேசுவது? என சாவர்க்கர் அவதூறு வழக்கில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதே நேரம் இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருக்கிறது.

"சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தார். அவரிடமிருந்து பென்ஷன் பெற்றார்" என்று ராகுல் காந்தி பேசியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் ராகுல் அணுகியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் டிபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையில் ராகுல் காந்திக்கு நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். "மகாத்மா காந்தி அவரது கடிதங்களில் 'உங்கள் பணிவான பணியாளர்' (Your faithful servant) என்று எழுதியிருக்கிறார்.
அப்படியென்றால் அவரும் பிரிட்டிஷார்களின் வேலைக்காரரா? அப்படித்தான் பொருள்படுமா?
சாவர்க்கருக்கு எதிராக ஏன் இப்படியான பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேச்சை பேசுகிறீர்கள்? நீங்கள் அரசியல் தலைவர்தானே! பின்னர் ஏன் சமூகத்தில் சலசலப்பை உருவாக்கும் வகையில் பேசுகிறீர்கள்? உங்களது பாட்டி, இந்திரா காந்தி, பிரதமராக இருந்தபோது, சாவர்க்கரை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. சுதந்திர போராட்ட வீரர்களை இப்படி பேசக்கூடாது. இந்த முறை உங்களுக்கு இடைக்கால தடை கொடுக்கிறோம்.
ஆனால் அடுத்த முறையும் இப்படியான புகார்கள் எழுந்தால், நாங்களே நேரடியாக தலையீடு செய்து வழக்கை நடத்துவோம்" என்று எச்சரித்துள்ளனர். ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்க்வி ஆஜராகியிருந்தார். ராகுல் காந்தி இனிமேல் இப்படி பேசமாட்டார் என்று அவர் உறுதியளித்திருந்தார். தற்போது ராகுலுக்கு வழங்கப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் ராகுலுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications