டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த பக்கம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி .. இந்த பக்கம் அமெரிக்கா தடுப்பூசி.. கலக்கும் சீரம் நிறுவனம்

Google Oneindia Tamil News

டெல்லி; ஆக்ஸ்போர்டு-அஸ்டாஜென்கா கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் மனிதர்களுக்கு சோதிக்கப்பட உள்ளது. இதற்கு உரிமம் பெற்றுள்ள புனேவை தலைமையிடமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் இன்னொரு கொரோனா தடுப்பூசி நிறுவனமான அமெரிக்காவின் நோவாவாக்ஸ் இன்க் உடன் மருந்து தயாரிக்க புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

மேரிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட நோவாவாக்ஸ் நிறுவனம் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (எஸ்.இ.சி) தாக்கல் செய்துள்ள தகவலின்படி, இரு நிறுவனங்களும் ஜூலை 30 அன்று ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தப்படி, நோவாவாக்ஸ் நிறுவனத்தின் கோவிட் -19 தடுப்பூசியான என்விஎக்ஸ்-கோவி தடுப்பூசியை தயாரித்து, சோதித்து வணிகமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 50 தன்னார்வலர்களை வைத்து நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட மனித சோதனைகளியில் "வலுவான ஆன்டிபாடி பதில்களை" வெளிப்படுத்தியதாக நோவாவாக்ஸ் செவ்வாயன்று அறிவித்தது.

 திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி

என்ன பலன்

என்ன பலன்

இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் தடுப்பூசியை வழங்குவதற்கான பிரத்யேக உரிமையையும், "தொற்றுநோய்க் காலத்தில்", பிரத்தியேகமற்ற உரிமைகளையும், உலக வங்கியால் "உயர் நடுத்தர அல்லது உயர் வருமானம் கொண்ட" நாடுகளாக அறிவிக்கப்பட்டதை தவிர அனைத்து நாடுகளுக்கும் வழங்கவும் சீரம் நிறுவனத்துக்கு உரிமம் கிடைத்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு, குறைந்த அல்லது நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நோவாவாக்ஸ் தடுப்பூசியை சந்தைப்படுத்த முடியும்.

எப்படி வருவாய்

எப்படி வருவாய்

ஒப்பந்தத்தின் கீழ், சீரம் நிறுவனம் தடுப்பூசியின் இரண்டு கூறுகளை வாங்கும் - ஆன்டிஜென் மருந்து பொருள் மற்றும் நோவாவாக்ஸின் வர்த்தக முத்திரையை வாங்கம் (தடுப்பூசியில் சேர்க்கப்பட்ட ஒரு கூறு, அதில் செலுத்தப்பட்டவர்களுக்கு உதவ, அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய). மேலும் ஒப்பந்தப்படி "தயாரிப்பு உரிமம் பெற்ற பிரதேசத்தில் விற்பனையிலிருந்து வருவாயை சமமாகப் பிரித்துக்கொள்ளலாம்.

நாடுகளில் விற்கலாம்

நாடுகளில் விற்கலாம்

தொற்றுநோயைத் தொடர்ந்து, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள எந்தவொரு மூன்றாம் தரப்பு தடுப்பூசி தயாரிப்பாளருக்கும் தடுப்பூசிக்கு உரிமம் வழங்க நோவாவாக்ஸ் எந்தவொரு "நல்ல வாய்ப்புகளையும் சீரம் நிறுவனத்துக்கு அறிவிக்கலாம். அத்தகைய மூன்றாம் தரப்பு விதிமுறைகளை "பொருத்த அல்லது மேம்படுத்த" சீரம் நிறுவனத்துக்கு வாய்ப்பு இருக்கும்,

சீரம் இன்னொரு முயற்சி

சீரம் இன்னொரு முயற்சி

சீரம் அதன் உரிமம் பெற்ற நாடுகளில் தடுப்பூசிக்கு "ஒழுங்குமுறை அங்கீகாரத்தை உருவாக்க மற்றும் பெற வணிக ரீதியாக நியாயமான முயற்சிகளை" பயன்படுத்தும். அந்த நாடுகளில் உற்பத்தியின் முதல் வணிக விற்பனையில் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் காலாவதியாகும். காலாவதியாகும் போது, ​​சீரம் "முழு பயன்பாட, பிரத்தியேகமற்ற உரிமத்தை" தக்க வைத்துக் கொள்ளும், இதனிடையே மற்றொரு அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸ் உடன் கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் பணியிலும் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த தடுப்பூசி இன்னும் மனிதர்களுக்கு செலுத்துவதற்கான முந்தைய கட்டத்தில் உள்ளது.

English summary
Even as it prepares to conduct late stage human trials on the Oxford-AstaZeneca vaccine candidate — branded ‘Covishield’ in India, Serum Institute inks deal for another Covid-19 shot .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X