மதஉணர்வை தூண்டியதாக வழக்கு.. ஜாமின் கோரிய முகமது ஜுபைரின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத உணர்வை தூண்டியதாக ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜாமின் கோரிய அவரது மனுவின் விசாரணையை செசன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
‛ஆல்ட் நியூஸ்' எனும் ‛பேக்ட் செக்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் வலதுசாரிகள் பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

முகமது ஜுபைர் கைது
இந்நிலையில் மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 2018 ல் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மத உணர்வை புண்படுத்தியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின் கோரி மனு
இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி டெல்லியில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஜூன் 2ல் விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து முகமது ஜுபைர் சார்பில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

ஒத்திவைப்பு
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. முகமது ஜுபைர் சார்பில் விருந்தா குரோவர் வாதாடினார். டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க காலஅவகாசம் கோரினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்தது.

தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல்
முன்னதாக முகமது ஜுபைர் பதிவு தொடர்பாக ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைத்து உள்ளது. இதனால் டெல்லி போலீசாரின் வழக்கிலும் ஜாமின் கிடைத்தால் சிறையில் இருந்து அவர் வெளியே வர முடியும். ஆனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்தது. இதனை எதிர்த்து முகமது ஜுபைர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications