வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு ‛செக்'.. ஸ்பான்ஷர்ஷிப்பை ரத்து செய்த பிரபல இந்திய நிறுவனம்! அதிரடி
டெல்லி: இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐபிஎல் கேகேஆர் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் டி20 உலககோப்பை போட்டிகளில் இந்தியாவில் விளையாடமாட்டோம் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது. இப்படியான சூழலில் தான் வங்கதேச வீரர்களுக்கான ஸ்பான்ஷர்ஷிப்பை பிரபலமான இந்திய நிறுவனம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே தற்போது பிரச்சனை உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசத்துக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் வங்கதேச பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் கேகேஆர் அணி ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுத்து இருந்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிசிசியை உத்தரவின்படி முஸ்தாபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக வங்கதேசம் உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் விளையாடமாட்டோம். தங்களுக்கான போட்டியை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளது. பிப்ரவரி 7 ம் தேதி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. போட்டிகளை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது.
வங்கதேசத்தின் அனைத்து லீக் போட்டிகளிலும் நம் நாட்டில் தான் நடக்கிறது. பிப்ரவரி 7ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணியையும், பிப்ரவரி 9 ம்தேதி இத்தாலியையும், பிப்ரவரி 14ல் இங்கிலாந்தையும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
அதன்பிறகு பிப்ரவரி 17 ம் தேதி நேபாள அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களை கூறி போட்டியை மாற்ற வங்கதேசம் கடிதம் எழுதி உள்ளது. இதற்கு இன்னும் ஐசிசி பாசிட்டிவான பதிலை வங்கதேசத்துக்கு அளிக்கவில்லை.
இந்நிலையில் தான் வங்கதேச வீரர்களுக்கான ஸ்பான்ஷர்ஷிப்பை ரத்து செய்யும் வேலையில் எஸ்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. எஸ்ஜி என்பது (SG Sanspareils Greenland) நம் நாட்டை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இது விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஷர்ஷிப் வழங்கி வருகிறது.
அந்த வகையில் வங்கதேச அணியின் டி20 உலககோப்பை கேப்டனாக இருக்கும் லிட்டன் தாஸ்க்கு எஸ்ஜி நிறுவனம் ஸ்பான்ஷர்ஷிப் வழங்கி வந்தது. தற்போது அந்த ஸ்பான்ஷர்ஷிப் ரத்து செய்யப்பட்டது. ஸ்பான்ஷிப் முடியும் தருவாயில் மீண்டும் புதுப்பிக்க எஸ்ஜி நிறுவனம் விரும்பவில்லை. இதனால் எஸ்ஜி நிறுவனம் வழியாக அவருக்கு கிடைக்கும் பணம், ஸ்பான்ஷர்ஷிப் உள்ளிட்டவை இனி கிடைக்காது.
அதேபோல் லிட்டன் தாஸ் மட்டுமின்றி வங்கதேசத்தின் முன்னாள் டெஸ்ட் அணியின் கேப்டன் மொமினுல் ஹக், யாசீர் அலி ராபி ஆகியோரும் எஸ்ஜி ஸ்பான்ஷர்ஷிப்பால் பாதிக்கப்பட உள்ளனர். இவர்களும் எஸ்ஜி நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப் பெற்று விளையாடி வந்த நிலையில் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இதுபற்றி வீரர் மொமினுல் ஹக் கூறுகையி்ல, ‛‛லிட்டன் தாஸ் ஸ்பான்ஷர்ஷிப்பை எஸ்ஜி நிறுவனம் ரத்து செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். ஆனால் எனது ஸ்பான்ஷர்ஷிப் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை'' என்றார். அதேவேளையில் லிட்டன் தாஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் நம் நாட்டில் இருந்து தான் அதிகப்படியான விளையாட்டு உபகரணங்கள் செல்கின்றன. கிரிக்கெட் பேட், ஹாக்கி உபகரணங்கள் செல்கின்றன. இதுதவிர பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளிலும் இருந்தும் வங்கதேசம் தற்போது வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தொடரும் மோதல் இருநாடுகள் இடையேயான வர்த்கத்தை பாதிக்கும் என்று திமிராக பேசி உள்ளது.
-
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க












Click it and Unblock the Notifications