கலைநயமிக்க நடிப்பு.. மோடிக்கு மட்டும் கண்ணீர் வராதா என்ன? - சசி தரூர் கிண்டல்
டெல்லி: குலாம் நபி ஆசாத் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு பேசியது கலைத்திறன் மிக்க நடிப்பு என்று சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும் அமளிக்கு இடையே பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 9ம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, வரும் 15ம் தேதியோடு நிறைவைடையும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத்தின் பதவிக்காலம் குறித்து பேசும் போது பிரதமர் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.

மறக்கவே முடியாது
"காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் போது அங்கு ஏராளமான குஜராத் மக்கள் சிக்கிக் கொண்டனர். அப்போது அவர்களை மீட்கும் முயற்சியில் பெரும்பங்காற்றிய ஆசாத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று இரவு ஆசாத் என்னிடம் தொலைபேசியில் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது" என்று கூறிய போது, உணர்ச்சி மிகுதியில் பிரதமர் கண்களில் கண்ணீர் வந்தது.

சரியாக பயன்படுத்த வேண்டும்
மீண்டும் பேசிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் தனது குடும்ப உறுப்பினர்களைப் போன்று பாவித்தவர். அதிகாரம் வரும் போகும். அதனை நாம் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்று கூறிய போது மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார்.

சசி தரூர் கிண்டல்
இந்நிலையில், முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரியின் "By Many a Happy Accident: Recollections of a Life", என்ற நூலின் விவாதக் கூட்டத்தில் பேசிய சசி தரூர், பிரதமர் மோடியின் பேச்சை 'கலைத்திறனுடன் கூடிய பெர்ஃபாமன்ஸ்' என்று மேற்கோளிட்டு, பிரதமரின் சிறப்பான நடிப்பு என்பதாக சூசகமாக சாடியுள்ளார்.

தன்னாலும் அழ முடியும்
மேலும், காஸிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் விட்ட கண்ணீருக்கு பதில் கொடுக்கும் விதமாக, தன்னாலும் கண்ணீர் விட முடியும் என்பதை மோடி காட்டியுள்ளார்" என்று சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications