“அந்த விஷயத்தில் வீக்”..கொரோனாவால் ஆண்மை கோளாறு? மருத்துவ உதவி கேட்டு அலையும் தம்பதிகள்.. அதிர்ச்சி
டெல்லி : கொரோனா காரணமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் தம்பதியினருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும், கொரோனா பாதிப்பால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் சீனாவின் வூகான் மாகணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது.
பொருளாதாரம், தொழில், வளர்ச்சி என அனைத்துத் துறைகளையும் தலைகீழாக புரட்டிப் போட்ட கொரோனாவின் ஆதிக்கம் தற்போது வரை நீடித்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் தாக்கம் உள்ளது.

கொரோனா பாதிப்பு
சானிடைசர், தனி மனித இடைவெளி, லாக்டவுன், ஒர்க் ப்ரம் ஹோம், பேண்டமிக், மூக்கில் கொரோனா பரிசோதனை என பல்வேறு புதிய வரவுகளும் கொரோனா காலம் நமக்கு கொடுத்ததுதான். குறிப்பாக முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது ஏராளமான நிறுவனங்கள் தங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறின. இதன் காரணமாக நிறுவனங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன. வாடகை, மின் கட்டணம், பராமரிப்பு செலவு என நிதி தேவை குறைந்ததால் தற்போது வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை தொடர்கிறது.

பாலியல் பிரச்சினைகள்
இந்நிலையில் கொரோனாவுக்கு பின், பாலியல் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடிய தம்பதிகள் அதிகமாகியுள்ளதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களே தங்கள் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து வர முன்முயற்சி எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம், பல தம்பதிகள் தங்கள் குடும்பங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தனித்தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிலர் தம்பதியினருக்குள் தேவையில்லாத பதட்டங்கள் மற்றும் சச்சரவுகளுக்கு ஏற்பட்டு பிரிவுக்கு வழிவகுத்தது.

அடிக்கடி சண்டை
இதனால் தம்பதியினருக்குள் பாலியல் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்தியாவின் சிறந்த பாலியல் வல்லுனர்களில் ஒருவரான டாக்டர் பிரகாஷ் கோத்தாரி கூறுகையில், கொரோனா காரணமாக பல தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருக்கவும், வீட்டிலிருந்து வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த ஒரு விஷயம் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக பெண் துணையை சங்கடப்படுத்தி விரக்திக்கு வழிவகுத்ததோடு, பாலியல் ஆசையை குறைத்தது என்கிறார்.

மருத்துவர்கள் விளக்கம்
தொடர்ச்சியான சண்டை சச்சரவுகளும் தம்பதியினருக்குள் மோதல் உள்ளிட்ட விஷயங்களை மோசமாக்கியது. இந்தியாவில் பெண்கள் திருமணத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளும் நிலையில், அதிகமான பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைத் தீர்த்துக்கொள்ள முன்வந்ததாக டாக்டர் கோத்தாரி கூறினார். "பாலியல் உரிமை அவர்களின் அடிப்படை உரிமை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள், அது மதிக்கப்பட வேண்டும்." பல பெண்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க தன்னை தொடர்பு கொண்டதாகவும், தங்கள் கணவர்களை அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

பாலியல் வாழ்க்கை
பெங்களூரில் உள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் பத்மினி பிரசாத் பேசும்போது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பல தம்பதிகள் ஆலோசனை பெறுவதாகவும், , "கோவிட் தாக்கம் பல ஆண்களிடம் காணப்பட்டது. அவர்கள் விறைப்புத்தன்மை இல்லாமல் மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றால் பாதிக்கட்டுள்ளதாகவும், இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதித்தது என்று தன்னிடம் ஆலோசனை பெற வந்தவர்கள் தெரிவித்ததாக கூறினார்.

உடலுறவுக்கு தயக்கம்
மும்பை, முலுண்ட், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் மனநல மருத்துவர் மற்றும் பாலியல் நிபுணரான டாக்டர் சஞ்சய் குமாவத் கூறுகையில், மன உளைச்சல் காரணமாக தங்கள் கணவர் உடலுறவுக்கு தயக்கம் காட்டுவது குறித்து பல பெண்கள் அவரிடம் ஆலோசனை கேட்டதாக கூறுகிறார். "பாலியல் பிரச்சனைகள் மற்றும் குறைந்த ஆண்மை பற்றி என்னிடம் வந்த பல கார்ப்பரேட் நபர்களை நான் பார்த்தேன். டார்கெட்டை முடிப்பதற்காக, வார இறுதி இடைவெளி கூட இல்லாமல், காலை முதல் இரவு வரை வேலை செய்து கொண்டே இருந்தனர். இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதித்தது என்கிறார்.












Click it and Unblock the Notifications