இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட அந்த மாற்றம்.. சைலன்டாக பூமியை தாக்கிய சூரிய புயல்! வரும் புது வார்னிங்
டெல்லி: கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சூரிய புயல் தாக்கியதில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ரோடியோ வேவ் முடங்கியுள்ளது. இதற்கிடையே வரும் காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது இந்த சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். சூரியனில் இருந்து வரும் சூரிய கதிர்களே பூமிக்கு முழுக்க முழுக்க ஆதாரமாக உள்ளது

சூரியனில் ஏற்படும் சிறு மாற்றமும் இங்கே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் சூரியன் குறித்து உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் இதில் தீவிர ஆய்வில் இயங்கி உள்ளனர். இதற்கிடையே சூரியனில் இருந்து கிளம்பிய சோலார் புயல் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சூரிய புயல்: இந்த சோலார் புயல் கடந்த ஏப்ரல் 6இல் இந்தியப் பெருங்கடலில் தாக்கியதாகவும் இதனால் அந்த ஏரியாவில் ஷார்வேவ் ரேடியோ அலைகள் கொஞ்ச நேரம் முடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூரிய புயல் பூமியைத் தாக்கிய போது M ரேட்டட் சோலார் புயலாக இருந்தது. எம்-கிளாஸ் சூரிய புயல் என்பது நடுத்தர அளவு கொண்ட ஒரு புயலாகும். இவை பூமியைத் தாக்கும் போது, சில மணி நேரம் வரை ரேடியோ பிளாக்அவுட்கள் ஏற்படும்.
சூரியனின் தென்கிழக்கு பகுதியில் ஒரு புதிய சன்ஸ்பாட் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் இருந்தே இந்த M3 சூரிய புயல் உருவாகியுள்ளது என்றும் இனி வரும் காலங்களில் இந்த சூரிய புள்ளியில் இருந்து மேலும் சில புயல்கள் கிளம்ப வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
ஏன் ஆபத்து: இது குறித்து ஸ்பேஸ்வெதர் தளத்தில், "ஏப்ரல் 6ஆம் தேதி இந்திய நேரப்படி மணிக்கு ஏற்பட்ட சூரிய புயல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஷார்வேவ் ரேடியோ சிக்னல்களை பாதித்து பிளாக்அவுட்டை ஏற்படுத்தியது.. வரைபடம். வரும் காலத்தில் அந்த சோலார் ஸ்பாட்டில் இருந்து மேலும் பல புயல்கள் உருவாகக் கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சூரியனில் இருந்து கிளம்பும் இந்த புயல்கள் பூமிக்கு ஆபத்தானது.. அதில் இருக்கும் கதிர்வீச்சு நமது ரேடியோ சிக்னல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த புயல்கள் இணையச் சேவை, மின்னணு தகவல் தொடர்பு அமைப்பு, மின்சார நெட்வொர்குகளை கூட பாதிக்கலாம். மேலும், அவை சாட்டிலைட்களையும் அழிக்கும் திறன் கொண்டவை.
சூரிய புயல் வகைகள்: பொதுவாக இந்த சோலார் புயல்கள் பி, சி, எம் மற்றும் எக்ஸ் என பல வகைகளாக உள்ளன. B வகுப்பு சூரிய புயல் சிறியது. அதில் இருந்து மெல்ல அதிகரித்து X வகை பாதிப்பு அதிம் சக்திவாய்ந்தவை.
சூரியன் சுழற்சி என்பது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். அதன்படி சூரியன் இப்போது தனது 11 ஆண்டு சுழற்சியின் உச்சத்தை நெருங்கி வருவதால், சூரியனில் வரும் காலத்தில் ஏற்படும் சோலார் புயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.
சூரியன்: 2025 ஆம் ஆண்டில் சூரிய சுழற்சி உச்சத்தை அடையும் என்பதால் வரும் காலத்தில் இது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் இதனால் சாட்டிலைட்கள், விண்வெளி வீரர்களும் பாதிக்கப்படலாம் என்று நாசா கூறுகிறது. இப்போது சூரியன் டிசம்பர் 2019 இல் தொடங்கிய சூரிய சுழற்சியில் இருக்கிறது.
இந்த சுழற்சியின் போது உச்சத்தை அடையும் வரை சூரியனின் செயல்பாடு தொடர்ந்து அதிகரிக்கும்.. சூரிய புயல்களின் போது பூமியை நோக்கி கரோனல் மாஸ் எஜெக்ஷன்களை (CME) வெளியாகும். இந்த CMEக்கள் தான் பூமியில் புவி காந்த புயல்களை ஏற்படுத்தி மின் உள்கட்டமைப்பையும் பாதிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications