Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷ்ரத்தா கொலை வழக்கு.. நார்கோ டெஸ்டில் டாக்டர்களையே முட்டாளாக்க நினைத்த அப்தாப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷ்ரத்தா கொலை குற்றவாளியான அப்தாப், தனக்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின் போது முன்கூட்டியே ஒத்திகை பார்த்து விட்டு அதன்படி பதில்களை அளித்து மருத்துவர்களையே முட்டாளாக்க முயற்சித்து இருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் வசாய் நகரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா. மும்பையில் கால் செண்டரில் பணியாற்றி வந்த ஷர்த்தாவுக்கும் அப்தாப் அமீன் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நெருங்கி பழகிய இவர்கள் இருவரும் டெல்லியில் லிவிங் டு கெதர் முறையில் வசித்து வந்தனர். ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால், அவரை கொலை செய்த அப்தாப், அந்தக் கொலையை மறைக்க செய்த காரியங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் படங்களை மிஞ்சும் அளவுக்கு அமைந்தது.

 எதுவுமே நடக்காதது போல

எதுவுமே நடக்காதது போல

டெல்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு கொலை வழக்காக மாறிய ஷர்த்தா வழக்கில் போலீசார் விசாரணையில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி வைத்தது. கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு, எதுவுமே நடக்காதது போல மிக சாதாரணமாக அப்தாப் நடமாடி வந்து இருக்கிறார். சைக்கோ கொலையாளி போல நடந்து கொண்ட அப்தாப், ஷர்த்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி புதிதாக வாங்கிய பிரிட்ஜில் மூன்று வாரங்கள் வீட்டில் வைத்துள்ளார்.

டேட்டிங் ஆப் மூலமாக

டேட்டிங் ஆப் மூலமாக

அதன் பிறகே டெல்லியில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் ஷ்ரத்தா உடலை வீசியுள்ளார். ஷ்ரத்தாவின் உடலை வீட்டில் வைத்திருக்கும் போதே டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களுடன் பழகி அவர்களை தனது வீட்டிற்கே அப்தாப் அழைத்து வந்தது ஜாலியாக இருந்த தகவலும் கேட்டு போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஷரத்தாவின் தந்தை அளித்த புகாருக்குப் பிறகு இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

நீதிமன்றக்காவலில்

நீதிமன்றக்காவலில்

ஷ்ரத்தா தந்தை அளித்த புகாரின் பேரில் அப்தாப்பிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் நடத்திய தில்லாலங்கடி வேலைகளை கண்டுபிடித்து கைது செய்தனர். முதலில் ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடினார். ஆனால், ஷ்ரத்தாவின் சமூக வலைத்தள கணக்குகளை அப்தாப் பயன்படுத்தியது உள்ளிட்ட தகவல்களை கண்டறிந்து போலீசார் அப்தாப்பிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன்பிறகே கொலையை அப்தாப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கைதான அப்தாப், தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீன கத்திகளை பயன்படுத்த்திய அப்தாப்

சீன கத்திகளை பயன்படுத்த்திய அப்தாப்

இதற்கிடையே, அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடைபெற்றது. இதில் ஷரத்தா கொலை தொடர்பான பல முக்கிய தகவல்களை அப்தாப் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷ்ரத்தாவின் உடலை வெட்ட சீன கத்திகளை அப்தாப் பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, கறிக்கடையில் பயன்படுத்தும் கத்திகளை போன்று இருக்கும் ரக கத்திகளை வைத்தே ஷர்த்தா உடலை வெட்டியிருக்கிறார். இந்தக் கத்தியையும் தற்போது கைப்பற்றி இருக்கும் போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் அவரது கையை வெட்டியதாக

முதலில் அவரது கையை வெட்டியதாக

அப்தாப் இந்தக் கத்தியை ஷ்ரத்தாவை கொலை செய்யும் முன்பே வாங்கி வைத்திருந்தாரா அல்லது கொலைக்கு பிறகு வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், இந்தக் கத்தியை எங்கு வாங்கினார் என்ற விவரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர். ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்த அப்தாப், முதலில் அவரது கையை வெட்டியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. உண்மை கண்டறியும் சோதனையின் போது, ஷரத்தா உடலை வெட்ட பயன்படுத்த வைத்திருந்த ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்தையும் அப்தாப் உளறிக்கொட்டியதாக போலீஸ் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, அப்தாப் கூறிய இடங்களில் ஆயுதங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஒத்திகை பார்த்துவிட்டு பதில்

ஒத்திகை பார்த்துவிட்டு பதில்

இதனிடையே, உண்மை கண்டறியும் நார்கோ சோதனையின் போது மருத்துவர்களையே முட்டாள் ஆக்க அப்தாப் முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நார்கோ டெஸ்டின் போது, சோடியம் பெந்தோதால், ஸ்கோபோலேமின், சோடியம் அமிதல் போன்ற மருந்துகள் அளிக்கப்பட்டு மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்படுவர். அதன்பிறகு விசாரணை நடைபெறும். இத்தகைய கடினமான விசாரணையின் போது கூட சைக்காலஜிஸ்ட்களையும் டாக்டர்களையும் முட்டாள் ஆக்க அப்தாப் முயற்சித்து இருக்கிறார். அதாவது ஏற்கனவே முன்கூட்டியே இந்த பதிலை அளிக்க வேண்டும் என்று ஒத்திகை பார்த்துவிட்டு அதன்படி அப்தாப் பதிலை அளிக்க முயற்சித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+