Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு.. தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தந்தைக்கு நெஞ்சு வலி
டெல்லி: நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்குச் சற்று நேரத்திற்கு முன்பு ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தூணாகத் திகழும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் இந்தியா டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு
ஸ்மிருதி மந்தனா கடந்த சில ஆண்டுகளாகவே பலாஷ் முச்சல் என்பவரை டேட் செய்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்கு சில காலம் முன்பு ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நஞ்சு வலி
காலை உணவு சாப்பிடும்போது அவரது தந்தைக்கு நெஞ்சின் இடது பக்கம் லேசான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சீனிவாஸ் மந்தனா உடனடியாக சாங்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி அறிந்ததும் ஸ்மிருதி மந்தனாவும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இப்போது சீனிவாஸ் மந்தனா உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்று நடைபெற இருந்த திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனிவாஸ் உடல்நிலை மீண்டும் சீரான பிறகு வேறு ஒரு நாளில் திருமணம் செய்து கொள்ள ஸ்மிருதி மந்தனா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக மருத்துவர் நமன் ஷா கூறுகையில், "காலை 11:30 மணியளவில் ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு இடது பக்க நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சங்லியில் உள்ள சர்வஹித் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது கார்டியாக் என்சைம்கள் சற்றே அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவருக்குத் தொடர்ச்சியான ECG கண்காணிப்பும், ஆஞ்சியோகிராஃபியும் தேவைப்படலாம். திருமணத்திற்காகத் தொடர்ச்சியாக வேலை செய்ததால் ஏற்பட்ட அழுத்தம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.
என்ன நடந்தது
தந்தைக்கு உடல்நிலை இப்படி இருப்பதால்.. இந்த நேரத்தில் திருமணம் வேண்டாம் என மந்தனா திட்டவட்டமாகக் கூறியதாக அவரது மேனேஜர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதி மந்தனா மேனஜர் துஹின் மிஸ்ரா ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவிடம், "இன்று காலை உணவு சாப்பிடும்போது, அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. அவருக்குச் சரியாகும் என சிறிது நேரம் காத்திருந்தோம்.. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் ரிஸ்க் வேண்டாம் என உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றோம். தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். ஸ்மிருதி தன் தந்தையிடம் எவ்வளவு பாசமாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், தனது தந்தை குணமடையும் வரை திருமணத்தைத் தள்ளி வைக்க ஸ்மிருதி முடிவு செய்துள்ளார்" என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications