ஒற்றை செருப்பு.. வாயில் கவ்விச்சென்ற பாம்பு..காலே இல்லையே செருப்பு எதுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்
டெல்லி: பாம்பு ஒன்று தனது வாயினால் ரப்பர் செருப்பை எடுத்துச்செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
'பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கால்களும் இல்லை. இது எந்த இடத்தில் என்று தெரியவில்லை'' என்று வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பு கதைகள் தொடர்பான சீரியல்கள் டிவியில் ஒளிபரப்பாகி இன்றைக்கும் ஹிட் அடித்து வருகிறது. நாக கன்னிகள் தொடர்பான கதைகள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. பாம்புகள் பற்றிய பயமே இதற்குக் காரணம். பாம்பு தீண்டினால் உயிர் போய்விடும் என்ற பயம்தான். சமீபத்தில் கூட நாக தோஷம் கழிக்க பாம்பை தீண்டியிருக்கிறார் ஒருவர். அந்த பாம்பு நாக்கில் கொத்தியதில் பேச்சுத் திறனையே இழந்து விட்டார்.
பாம்பு மீதான பயத்தினால்தான் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு வந்தாலே அடித்து விரட்டுவார்கள். அப்படித்தான் பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. சிசிடிவி கேமராவில் பாம்பு வருவதைப் பார்த்த பெண் ஒருவர் தனது செருப்பை எடுத்து பாம்பு மீது வீசினார்.

செருப்பை கவ்விய பாம்பு
ஆனால், அந்த பாம்போ அதற்கு பயப்படாமல், வீசிய செருப்பை லாவகமாக கவ்விக் கொண்டு செல்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்.

கால்கள் இல்லையே
தனது பதிவில், ''பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கால்களும் இல்லை. இது எந்த இடத்தில் என்று தெரியவில்லை'' என்று பர்வீன் கஸ்வான் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் உனக்கு காலே இல்லையே செருப்பு எதற்கு என்று கேட்டுள்ளனர்.

2.78 லட்சம் பேர் ரசித்த வீடியோ
சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக விலங்குகள் தொடர்பான வீடியோக்களை பார்த்து ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படித்தான் இந்த பாம்பு வீடியோவும் அனைவராலும் ஆச்சரியத்துடன் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். பாம்பு வீடியோவை பர்வீன் பகிர்ந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை 2.78 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஏறக்குறைய 7881 பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பலர் லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாம்பு ரசிகர்கள்
பாம்பு தொடர்பான வீடியோக்கள் அனைவராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும். சமீபத்தில் ஒரு ஊரில் அபூர்வ நாகம் ஒன்று தண்ணீரில் நீந்திச்செல்லும் வீடியோ வைரலானது. அதே போல இரண்டு பாம்புகள் இணைந்து சுற்றும் வீடியோக்களும் பார்த்து ரசிக்கப்பட்டு பகிரப்பட்டது. பாம்பு செருப்பை கவ்விச்செல்லும் வீடியோவும் லட்சக்கணக்கான நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications