முடியல.. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையை ஒத்திவையுங்க... அமலாக்க பிரிவுக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: கொரோனா பாதிப்பு மற்றும் சுவாசக்குழாயில் பூஞ்சை தாக்குதல் ஆகியவற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சோனியா காந்தி நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணையை சில வாரங்கள் ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கப்பிரிவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பங்குகளை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுலிடம் 5 நாள் விசாரணை
இந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை தொடர்ந்து ராகுல்காந்தி 5 நாட்கள் ஆஜராகி அமலாக்கத்துறையினரின் கேள்விக்கு பதில்கள் அளித்துள்ளார். ராகுல்காந்தியிடம் நேற்று வரை மொத்தம் 5 நாட்கள் 50 மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடந்துள்ளது.

சோனியா காந்திக்கு கொரோனா
முன்னதாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தான் ஜூன் 2ல் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஜூன் 8 ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருந்த நிலையில் சோனியா காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இதற்கிடையே மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததால் அவர் ஜூன் 12ல் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

டிஸ்சார்ஜ் ஆன சோனியா
மருத்துவ பரிசோதனையில் சுவாசக்குழாயில் அவருக்கு பூஞ்சை தாக்குதல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொரோனாவுக்கு பிந்தைய மற்றும் சுவாசக்குழாய் பூஞ்சை தாக்குதலுக்கான சிகிச்சைகள் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவரது உடல்நலம் குணமாகி வந்தது. நேற்று முன்தினம் மாலையில் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இருப்பினும் டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க சொல்லி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

சில வாரம் ஒத்திவைக்க கடிதம்
இந்நிலையில் தான் சோனியா காந்தி விரைவில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜராகலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் வழக்கு விசாரணையை சில வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என சோனியா காந்தி தரப்பில் இருந்து அமலாக்கப்பிரிவினருக்கு இன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறியது குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛தான் முழுமையாக குணமாகும் வகையில் விசாரணையை சில வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து சோனியா காந்தி இன்று கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது''என கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications