உக்ரைனில் இருந்து சிறப்பு ரயில்... இந்திய மாணவர்கள் கீவ் ரயில் நிலையம் செல்ல தூதரகம் வேண்டுகோள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: உக்ரைன் தலைநகர் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அன்டை நாடுகளுக்கு செல்ல உக்ரைனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரஷ்யா - உக்ரைன் எல்லையில் இன்று 5வது நாளாக போர் நீடிக்கிறது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் முனைப்பு காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம். முழுமையாக அதை கைப்பற்றும் நோக்கில் அதை ஒட்டியுள்ள நகரங்களில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. 5வது நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேசன் கங்கா
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கங்கா' என மத்திய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் இன்று வரை உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக 6 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

தவிக்கும் மாணவர்கள்
இப்போதும் பல மாணவர்கள், உக்ரைனில் உணவு, தண்ணீர் இல்லாமல் பதுங்குகுழிகளில் பதுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய மாணவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டு எல்லை வழியாக தாயகம் திரும்ப போலந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடக்கும் பகுதியிலிருந்து இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் நேற்று அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உக்ரைன் ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இவற்றில் முதலில் வருபவர்களுக்கு இடமளிக்கப்படும்.
Recommended Video

சிறப்பு ரயில் இயக்கம்
மாணவர்கள் அன்டை நாடுகளுக்கு செல்ல உக்ரைனில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
இந்திய மாணவர்கள் ரயில் மூலமாக பாதுகாப்பாக வேறு நகரங்களுக்கு இடம் பெயர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ரயில் நிலையங்களுக்கு அருகில் தங்கியிருக்குமாறும் கூறப்பட்டுள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications