சோயிப் மாலிக்குடன் விவாகரத்தா?.. சானியா மிர்சாவின் இன்ஸ்டா பதிவை பார்த்து ரசிகர்கள் ஷாக்! என்னாச்சு
டெல்லி: சானியா மிர்சா- சோயிப் மாலிக் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மிகவும் உருக்கத்துடன் மறைமுகமாக வெளியிட்டு இருக்கும் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதாரபாத்தை சேர்ந்த சானியா மிர்சா இந்தியாவில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருகிறார்.
சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சோயிப் மாலிக்கிற்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில்தான் இவர்கள் திருமணமும் நடைபெற்று இருந்தது.

சோயிப் மாலிக்- சானியா மிர்சா
நட்சத்திர தம்பதியான சோயிப் மாலிக்- சானியா மிர்சா ஜோடி துபாயில் வசித்து வருகின்றனர். திருமணம் முடிந்தாலும் இந்தியாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா தொடர்ந்து பங்கேற்று விளையாடி வந்தார். அதேபோல், சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க சானியா மிர்சா மறுத்துவிட்டார். இந்த ஜோடிக்கு 4 வயதில் இஷ்ஹான் மிர்சா என்ற மகனும் உள்ளான்.

இன்ஸ்டாகிராமில் பதிவு
மகிழ்ச்சிகரமாக வலம் வந்த இந்த ஜோடிகளுக்கு இடையே தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சானியா மிர்சா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு, இருவருக்கும் இடையேயான பிளவு என்ற யூகங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காரணம் என்ன
சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், "உடைந்த மனங்கள் எங்கே செல்கின்றன... அல்லாவைக் காண" என்று பதிவிட்டு இருந்தார். சானியா மிர்சாவின் சோயிப் மாலிக் உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இப்படி மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இடையேயான பிளவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையேயான பிளவு ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

சோயிப் மாலிக் ஏமாற்றி விட்டதாக..
எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சானியா மிர்சாவை சோயிப் மாலிக் ஏமாற்றி விட்டதாகவும், இதுதான் மனக்கசப்புக்கு காரணம் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும், சமீப காலமாவே இந்த தம்பதிகள் ஒன்றாக வசிக்கவில்லை என்றும் தனித்தனியாகவே வசித்து வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை
தங்களது மகனுக்காக மட்டுமே இருவரும் ஒன்றாக இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடி பிரிந்து விட்டதாக வதந்திகள் கொடி கட்டி பறந்தாலும் இதுவரை இந்த தம்பதி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications