டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டீராய்டுகள் ஆக்ஜிஸன் அளவை குறைக்கும் காரணி.. எச்சரிக்கும் எய்ம்ஸ் தலைவர்!

Google Oneindia Tamil News

டெல்லி: லேசான கொரோனா இருப்பவர்களுக்குக் கூட ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதை எதிர்கொள்ள இந்தியாவே போராடி வருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் பெரும்பாலான நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேரிடுகிறார்கள்.

 வெளிநாடுகளின் கோவிட் உதவிகள்.. வந்த சரக்கெல்லாம் எங்க? - 'பதில்' தர தடுமாறும் அமைச்சகங்கள் வெளிநாடுகளின் கோவிட் உதவிகள்.. வந்த சரக்கெல்லாம் எங்க? - 'பதில்' தர தடுமாறும் அமைச்சகங்கள்

இது போல் கொரோனாவின் தாக்கம் , தீவிரத்தை பொருத்த மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிற போதிலும் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகள்

கொரோனா அறிகுறிகள்

இதுகுறித்து அவர் கூறுகையில் கொரோனா அறிகுறிகள் லேசாக இருக்கும் போதே சிலர் சிடி ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் எடுக்கிறார்கள். இதுபோல் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு வீரியம் குறைந்த மருந்துகளை உட்கொண்டாலே போதுமானது. மேலும் மாஸ்க் அணிதல் , சமூக இடைவெளியுடன் இருத்தல் ஆகியவையே போதுமானது. ஆனால் சில மருத்துவர்கள் இவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது வைரஸின் அளவை பல மடங்கு பெருக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஸ்டீராய்டு

ஸ்டீராய்டு

கொரோனா வந்த முதல் 5 நாட்களுக்கு ஸ்டீராய்டு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. லேசான அறிகுறி உடையவர்கள் திடீரென மோசமான நிலைக்கு செல்வதையும் தீவிர நிமோனியா காய்ச்சல் ஏற்படுவதையும் பார்க்கிறோம். இதெல்லாம் ஸ்டீராய்டுதான் காரணம்.

என்ன சிகிச்சை

என்ன சிகிச்சை

கொரோனா நோயின் தாக்கம் நடுத்தர அளவில் உள்ள போது 3 சிறப்பான சிகிச்சைகளே முக்கியமானது. முதலில் ஆக்ஸிஜன் தெரபி, இரண்டாவது உடல்நல குறைவு மிதமாக இருக்கும் போதிலும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் அங்கு ஸ்டீராய்டுகளுக்கு வேலை இருக்கிறது. மூன்றாவது ஆன்டிகொயாகுலன்ட்கள்.

கோவிட் நிமோனியா

கோவிட் நிமோனியா

அதாவது கோவிட் 19 நிமோனியா என்பது வைரல் நிமோனியாவிலிருந்து வேறுபடுகிறது. கோவிட் நிமோனியாவானது ரத்தத்தை கெட்டியாக்குகிறது. இவ்வாறு நுரையீரலுக்கு செல்லும் ரத்தம் உறைந்துவிட்டால் ரத்த ஓட்டம் குறையும் என்றார் குலேரியா.

English summary
Steroid use too early may be causing drop in oxygen in covid patients: AIIMS chief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X