பயங்கரவாத நிதி.. “ஹவாலாவை” தடுக்கனும்! அந்த அமைப்பை தடை செய்தோம் - PFI தடை பற்றி அமித்ஷா பேச்சு
டெல்லி: ஹவாலா போன்ற அனைத்து வகையான பயங்கரவாத நிதி திரட்டலையும் தடுக்க வேண்டும் எனவும், அண்மையில் பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்த்த அமைப்புக்கு தடை விதித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
"பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை" என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
இதில், "நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்பு
அதை நாம் வெற்றிபெற விடக்கூடாது. சமூக சேவைகள் என்ற பெயரில் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றவும், பயங்கரவாதத்தில் தள்ளவும் சதி செய்ததாக அண்மையில் இந்திய அரசாங்கம் ஒரு அமைப்புக்கு தடை விதித்தது. இதுபோன்ற அமைப்புகளை ஒவ்வொரு நாடும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்
பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கும் சில நாடுகள், மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பயங்கரவாதத்திற்கு எந்த சர்வதேச எல்லையும் இல்லை என்று நான் நம்புகிறேன். எனவே அனைத்து நாடுகளும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தடய அறிவியல்
பயங்கரவாதம் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்க தடய அறிவியல் துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வழியில்தான் உலக அளவில் முதல் தடய அறிவியல் துறை பல்கலைக்கழகம் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அமைக்கப்பட்டது.

ஹவாலா நிதி
அனைத்து வகையான பயங்கரவாத நிதி திரட்டலையும் தடுக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அனைத்து நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம், டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை தளங்களை தவறாக பயன்படுத்துவது, ஹவாலா போன்ற அனைத்து வகையான தவறான நிதி பரிவர்த்தனைகளையும் தடுக்க வேண்டும்.

சைபர் குற்றங்கள்
பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை தடுக்க இந்திய அரசு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் டேட்டாபேஸ்களை அமைக்க முடிவு செய்து இருக்கிறது. அதேபோல், மத்திய அரசு, இந்திய சைபர் குற்ற கூட்டுறவு அமைப்பையும் ஏற்படுத்த இருக்கிறது." என்றார்.

பி.எஃப்.ஐ தடை
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications