ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்த பின்னணியில் சீன நாட்டு சதி? சு.சாமி சந்தேகம்
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் மரணமடைந்த நிலையில், இந்த விபத்தின் பின்னணியில் சீன சதி இருக்கக்கூடும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
குன்னூர் அருகே இன்று நண்பகலில் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் சில ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த பயங்கர விபத்தில் அதில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் மரணமடைந்துள்ளனர். கேப்டன் வருண், 80% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிபின் ராவத் மரணம்
உடல்கள் கருகி, அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு நிலைமை சென்ற நிலையில், பிபின் ராவத் மரணமடைந்த செய்தியை மாலை 6 மணிக்கு மேல் இந்திய விமானப்படையை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

சுப்பிரமணியன் சுவாமி
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி யூடியூப் சேனலில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிபின் ராவத் இறப்பு என்பது மிகப்பெரிய விஷயமாகும். ஏனென்றால் ராணுவத்தில் அவர் போன்ற உயர் பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளில் ஒரு சிலர்தான் அரசு பற்றி பயப்படாமல் சீனா, இந்தியாவிற்கு தொல்லை அளித்து வருகிறது, சீனா நமக்கு ஒரு ஆபத்து, சீனா நமது எல்லைக்குள் வந்து விட்டது என்று கூறியவர்.

சீனா பின்னணி
என்னுடைய புரிதல் படி, சைபர் வார்ஃபேர் (cyber warfare) இந்த விபத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம். லேசர் மூலமாக தொழில்நுட்ப மாறுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதுவும் அதுபோன்ற ஒன்றாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உள்ளது. சீனா ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம். தேச ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. நாம் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக மறு ஆய்வு செய்ய தேவையிருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தைவான் ராணுவ தலைவர்
கடந்த, ஆண்டு ஜனவரி மாதம், தைவானின் ராணுவ தலைவராக இருந்த, ஜெனரல் ஷென் யி-மிங் பயணித்த பிளாக் ஹாக் வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அவர் உட்பட 12 பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications