Sunita Williams: பக்கத்துல இருக்கிற டவுனுக்கு போய்ட்டு வர்ற மாதிரி.. சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணங்கள்!
டெல்லி: விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கி இருந்த நாசாவின் விண்வெளி குழுவில் இடம் பெற்றிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் மிகவும் பாதுகாப்பாக பூமிக்கு இன்று அதிகாலை திரும்பினர். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவதற்கு தாமதமானதால் 190 பரிசோதனைகள் மற்றும் 900 மணிநேர ஆராய்ச்சி மேற்கொண்டவர்களாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்ஸ்மோர் புதிய சாதனையும் படைத்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிப் பயணம் மேற்கொண்ட 2-வது இந்திய வம்சாவளி பெண். அவருக்கு முன்னர் கல்பனா சாவ்லா, விண்வெளிப் பயணம் மேற்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டு விண்வெளியில் இருந்து திரும்பும் போது கல்பனா சாவ்லாவின் விண்கலம் வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்தனர்.

கல்பனா சாவ்லாவுக்குப் பின்னர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்து கொண்டார். சுனிதா வில்லியம்ஸ் மிக சிறந்த போர் விமானியுமாவார்.
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணங்கள்
- 2006-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி டிஸ்கவரி விணகலம் மூலம் முதன் முதலாக விண்வெளிக்குப் பயணித்தார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி ஆய்வுகளை நிறைவு செய்துவிட்டு 2007-ம் ஆண்டு ஜூன் 22-ல் பூமிக்கு திரும்பியது சுனிதா வில்லியம்ஸ் குழு.
- சுனிதா வில்லியம்ஸின் 2-வது விண்வெளிப் பயணம் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜூலை 15-ல் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்கு பயணமானார். 2012-ம் ஆண்டு நவம்பர் 19-ல் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.
- சுனிதா வில்லியம்ஸ் 2015-ல் வர்த்தக அடிப்படையிலான நாசாவின் விண்வெளி பயணங்களுக்கான வீரராக அறிவிக்கப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். இதனடிப்படையில்தான் கடந்த ஆண்டு (2024) ஜூன் 5-ந் தேதி மீண்டும் விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணம் 8 நாட்கள் மட்டுமே திட்டமிட்ட நிலையில் தற்போது 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி உள்ளார். சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர வேண்டிய விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்கள் தாமதமானது. விண்வெளியில் 900 மணிநேரங்கள், 190 பரிசோதனைகளை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்சர் மேற்கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications