ஆந்திராவுக்கு ஒரே தலைநகர்.. மேல்முறையீடு விசாரணையிலிருந்து விலகினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார்.
ஏற்கெனவே மூன்று தலைநகருக்கு பதிலாக ஒரே தலைநகர் போதுமானது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து மாநில அரசான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தலைமை நீதிபதி விலகியுள்ளார்.

மூன்று தலைநகர்
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்தது. இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். ஆனால் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக தேர்வானார். இதனையடுத்து ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதாவது, நீதிமன்ற தலைநகராக கர்னூல், ஆட்சி தலைநகராக விசாகப்பட்டினம், சட்டசபை தலைநகராக அமராவதி என அறிவிக்கப்பட்டது.

மேல்முறையீடு
ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து தலைநகர் அமைய நிலம் கொடுத்த விவசாயிகள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கு விசாரணையில் மூன்று தலைநகர் அமைய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தடைவிதித்தது. மட்டுமல்லாது, அமராவதியில் 6 மாதத்திற்குள் புதிய தலைநகரை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தேர்தல் வாக்குறுதி தொடங்கி தற்போதுவரை மூன்று தலைநகர் திட்டத்தில் உறுதியாக இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 17ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

விலகல்
இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக லலித் அறிவித்துள்ளார். அதாவது, இந்த வழக்கில் மாநில அரசுக்கு எதிராக அமராவதி விவசாயிகள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஒரு விஷயத்தை கொண்டு வந்தார். அதாவது, தலைமை நீதிபதி 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்தபோது ஆந்திராவின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்கு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒத்திவைப்பு
இது சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையில் தான் பங்கேற்பது சரியாக இருக்காது என்று கூறி விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக தலைமை நீதிபதி லலித் அறிவித்துள்ளார். அதேபோல வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாகவும் அதுவரை விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். மீண்டும் வழக்கு விசாரணை எப்போது தொடரும் என்பது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் விசாரணை விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications