"போராட்டம் என்ற பெயரில்..” டெல்லி போராட்டம் குறித்த வழக்கு.. திட்டவட்டமாக சொன்ன உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தாலும், அதை காலவரையின்றி யாரும் ஆக்கிரமித்திருக்க முடியாது என்றும், போராட்டங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.

Supreme Court on Protest Sites Supreme Court Protest

வழக்கு

டெல்லியை பொறுத்தவரை கடந்த காலங்களில் எப்போதுமே ஜந்தர் மந்தரில் தான் போராட்டங்கள் நடக்கும். இருப்பினும் டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை மத்திய அரசு நீக்கியது. அதற்கு பதிலாக ராம்லீலா மைதானம் உள்ளிட்ட மூன்று மாற்று இடங்களையும் அறிவித்திருந்தது.

பல்வேறு மனுக்கள்

இதற்கிடையே ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் நடைபெற்ற மிக பெரிய போராட்டம், அண்மையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் இணைந்து ராம்லீலா மைதானத்தில் நடத்திய போராட்டம் ஆகியவை தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அதாவது பண்டிகை காலத்தில் போராட்டங்கள் நடத்தப்படுவதால் வணிகம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வணிகர் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

போராட்டங்களால் ஏற்பட்ட பிஸ்னஸ் பாதிப்பு, தடுப்பு காவல், காவல்துறையின் அத்துமீறல்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, இணைய சேவை முடக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் இன்று விசாரிக்கப்பட்டன.

தொடர முடியாது

விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அமைப்புகளும் நபர்களும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், "ஒரு இடத்தை எப்போதும் ஆக்கிரமித்திருக்க முடியாது. மற்றவர்களும் போராட்டம் நடத்த வருவார்கள். விவசாயிகளும் வழக்கறிஞர்களும் எங்கே செல்வார்கள்? அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது" என்று குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 20ம் தேதி நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்ததுடன் நாடாளுமன்றம் நோக்கியும் பேரணியாக சென்றதாகவும் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும், "நாடாளுமன்றம் என்பது மற்றொரு அரசியல் கட்டிடம் போன்றது அல்ல. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தை நோக்கியும் பேரணி செல்ல முடியாது" என்று அவர் கூறினார்.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

வணிகர் அமைப்புகள் தங்களது மனுவில், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வணிகர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்கு அருகே சுமார் 50 லட்சம் பேர் வசிப்பதாகவும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டமே இல்லாமல் போனதாகவும் இதனாஸ் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை வரவேற்றுள்ள அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால், "அமைதியான முறையில் போராட்டம் நடத்த அடிப்படை உரிமை இருக்கிறது. அதேநேரம் பொதுமக்கள் தங்களது தொழிலை தொடர்ந்து செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் உரிமை இருக்கிறது. இந்த இரண்டையும் நாம் சமநிலையுடன் பார்க்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+