தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை? - சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி
Recommended Video
டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.

இதுதொடர்பாக திமுக வழக்கு தொடுத்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது குறித்து மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த மே மாதம் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. 22 தொகுதி மாநில சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது.
எனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த சாத்தியமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைபடி 3 மாத காலஅவகாசம் அளிக்கலாம்" என தமிழக அரசு பதில் அளித்தது. மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவை மாநில தேர்தல் ஆணையமே எடுக்கலாம் என்றும் தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலும் சட்டசபை இடைத்தேர்தலும் முடிவடைந்து ஜூலை மாதமும் பிறந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதாவது இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தது ஏன்.
இறுதி வாக்காளர் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள். இன்னும் 2 வாரத்தில் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்போது தமிழக அரசு பதில் அளிக்கையில் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை நடந்ததால் தேர்தலை நடத்த தாமதம் ஆனது.












Click it and Unblock the Notifications