Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அபகரிப்பு வழக்கு.. முக அழகிரிக்கு ஷாக்! மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது எனவும், எனவே வழக்கை அங்கே சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளது.

மதுரை சிவரக்கோட்டையில் 4 செண்ட் கோயில் இடத்தை அபகரித்ததாக மு.க அழகிரி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தான் மு.க அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

MK Alagiri Supreme Court Chennai

கோயில் நிலத்தை அபகரித்ததாக

கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை சிவக்கோட்டையில் மு.க அழகிரியில் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரிக்காக 4 செண்ட் நிலம் அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும், இந்த இடத்தை அபகரிப்பு செய்ததாகவும் மு.க அழகிரி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அதிமுக ஆட்சியின் போது மு.க அழகிரி உள்பட 7 பேர் மீது கோயில் இடத்தை அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க அழகிரியை போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி பத்திரங்களை பயன்படுத்துதல், ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. எனினும் குற்றச்சதி, குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இதன் பின்னர் பகுதி குற்றச்சாடுகளில் இருந்து மு.க அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், அந்த மனுவை அனுமதித்ததோடு, மு.க அழகிரி அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறிய மு.க அழகிரியில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி மு.க அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஆர் மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர்.

வழக்கை எதிர்கொள்ள உத்தரவு

இன்று இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில் அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் கருத்து சரியாகவே உள்ளது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மு.க அழகிரி சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+