டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

17 வயதில் இரு குழந்தைகள்! சிறுமியை தாயாக்கிய தாய்மாமன்! உச்ச நீதிமன்றம் அளித்த ஆச்சர்ய தீர்ப்பு..!

Google Oneindia Tamil News

டெல்லி : 14 வயது முதல் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து தனது சொந்த அக்கா மகளை இரு குழந்தைகளுக்குத் தாயாக்கி, 18 வயது நிறைவடைந்த உடன் திருமணம் செய்த தாய் மாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி, தனது சொந்த அக்கா மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

இதன் காரணமாக சிறுமி 15 வயதிலும், 17 வயதிலும் குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இரு குழந்தைகளுக்கு தாயாக்கிய தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சிறுமிக்கு 18 வயதானதும் அவரை தண்டபாணி திருமணம் செய்துள்ளார். இதனிடையே போக்சோ சட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த வழக்கில் தண்டபாணிக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தண்டபாணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.

மேல் முறையீடு

மேல் முறையீடு

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும் தன்னை விடுதலை செய்யக்கோரி தண்டபாணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்டபாணி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதற்கான தண்டனையைக் குறைத்தது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்

உச்சநீதிமன்றத்தில் வாதம்

உச்சநீதிமன்றத்தில் வாதம்

தண்டபாணி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண் 18 வயதை கடந்து விட்டார் மேலும் அவர் கணவரான தண்டபாணி உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் அது தொடர்பான திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டபாணிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால் அந்த இளம் பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் இதனால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

அதிரடி தீர்ப்பு

அதிரடி தீர்ப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தண்டபாணி செய்தது தவறானது என்றாலும், தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான திருமண வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருப்பதாக கூறியிருப்பதால் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் தண்டபாணிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரமான பிரிவு-142ஐ பயன்படுத்தி ரத்து செய்கிறோம்.

தீர்ப்பு மாற்றி அமைக்கப்படும்

தீர்ப்பு மாற்றி அமைக்கப்படும்

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணை தண்டபாணி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அதிலிருந்து அவர் தவறும் பட்சத்தில் அந்த இளம்பெண்ணோ அல்லது தமிழக காவல் துறையோ நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில், அவரது தண்டனை ரத்து செய்த இந்த தீர்ப்பானது மாற்றி அமைக்கப்படும்'' எனக்கூறியதோடு, வழக்கு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

English summary
Supreme Court reverses sentence A man who married a 14-year-old girl after giving birth to two children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X