ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு- நாளை விசாரணை- தீர்ப்பு தேதி அறிவிப்பு?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா எம்.பி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பும் இன்றுடன் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நாளை நடைபெறும் விசாரணையின் போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்படக் கூடும் என தெரிகிறது.
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்ட்டது. இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு.

இது தொடர்பான வழக்கில் 2011-ம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 17 கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகினர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக 2018-ம் ஆண்டுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி முதல் தினசரி விசாரணையும் நடைபெற்று வந்தது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் சர்மா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை அக்டோபர் 30-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்












Click it and Unblock the Notifications