உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு.. 3 நீதிபதிகள் ஆதரவு! 2 நீதிபதிகள் எதிர்ப்பு! தீர்ப்பு முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். 2 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பாட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பாட் ஆகியோர் இதை எதிர்த்து உள்ளனர். Economically Weaker Sections (EWS) எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக இந்த இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இடஒதுக்கீடு மூலம் பலன் பெறாத முன்னேறிய வகுப்பினரின் இருக்கும் பொருளாதார ரீதியாக பின்னடைந்த மக்களுக்கு இந்த இடஒதுக்கீடு தருவதாக அறிவிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

பல மாநில அரசுகள் இந்த இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மத்திய அரசின் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. வருடம் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினராக இந்த இடஒதுக்கீட்டில் கருதப்படுவார்கள்.

ஏன் சிக்கல்?

ஏன் சிக்கல்?

ஆனால் இட ஒதுக்கீடு என்பது சாதி ரீதியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் பொருளாதார, சாதி, நிர்வாக சமத்துவத்தை மக்கள் அடைய வேண்டும் என்ற வரியை பயன்படுத்தி பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டை பாஜக கொண்டு வந்து இருக்கிறது. 2019 லோக்சபா தேர்தல், 5 மாநில தேர்தல்களை குறி வைத்து இந்த இடஒதுக்கீடு கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

எதிர்ப்பு ஏன்?

எதிர்ப்பு ஏன்?

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக போடப்பட்டது. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சிலவற்றில், இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், தேசிய அளவிலான 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற லிமிட்டை தாண்ட வேண்டி இருக்கும்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

அதோடு பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க கூடாது. அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமே இல்லை, என்று வாதங்களை வைத்தன. அதேபோல் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது, உச்ச நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் இது வரவில்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான சில கருத்துக்களை வைத்தது. அதன்படி இந்த இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியதா? இதை தனியார் நிறுவனங்கள் பின்தொடர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? இந்த இடஒதுக்கீட்டில் மற்ற ஜாதி பிரிவினரை சேர்க்க முடியுமா? என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதுதான் இந்த வழக்கில் முக்கியம் என்று கருத்துக்களை வைத்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான சில கருத்துக்களை வைத்தது. அதன்படி இந்த இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியதா? இதை தனியார் நிறுவனங்கள் பின்தொடர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? இந்த இடஒதுக்கீட்டில் மற்ற ஜாதி பிரிவினரை சேர்க்க முடியுமா? என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதுதான் இந்த வழக்கில் முக்கியம் என்று கருத்துக்களை வைத்தது.

இன்று தீர்ப்பு

இன்று தீர்ப்பு

முக்கியமாக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்கள் இடஒதுக்கீடு பெற்றால் அதில் என்ன தவறும் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 2019ல் மூன்று நீதிபதிகள் முன் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, அதன்பின் 5 நீதிபதிகளுக்கு மாற்றப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு விசாரணை தொடங்கி மொத்தம் 7 நாட்கள் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்களின் தீர்ப்புகள் பின்வருமாறு,

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனது தீர்ப்பில் மொத்தம் 3 விஷயங்களை நாம் இதில் ஆராய வேண்டும். இந்த இடஒதுக்கீடு ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். சமத்துவத்திற்கு எதிராக இது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு மீறுகிறதா என்று பார்க்க வேண்டும். இதை வைத்து பார்க்கையில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனி தீர்ப்பு வழங்கி உள்ளார். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறுவது தவறில்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.

நீதிபதி பேலா திரிவேதி

நீதிபதி பேலா திரிவேதி

நீதிபதி பேலா திரிவேதி தனது தீர்ப்பில், பொருளாதார இடஒதுக்கீடு தவறானது, நியாயமற்றது என்று கூற முடியாது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தனி பிரிவாக கருதுவது நல்லதுதான். சமத்துவம் இல்லாத இடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தவே இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு காரணமாக தனியாக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற பிரிவு உருவாகிறது. அதனால் அதில் மற்ற ஜாதி பிரிவினரை சேர்க்க வேண்டும் என்று கூற முடியாது, என்று அவர் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

நீதிபதிகள் இரண்டு பேர் எதிர்ப்பு

நீதிபதிகள் இரண்டு பேர் எதிர்ப்பு

பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடுவழங்குவதில் தவறு இல்லை, ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நீக்கியது தவறு, அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ் ரவீந்திர பாட் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இதை தலைமை நீதிபதி யுயு லலித் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் தனியாக தீர்ப்பு வழங்காமல் பாட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பாட் தனது தீர்ப்பில், நமது அரசியலமைப்பு சட்டம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

எதிரான இடஒதுக்கீடு

எதிரான இடஒதுக்கீடு

சமூக நீதிக்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை இந்த இடஒதுக்கீடு கேள்வி கேட்கிறது. பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாக இது அமைந்து விடும். பொருளாதார இடஒதுக்கீட்டில் எஸ், எஸ்டி, ஓபிசி பிரிவினர் இடம்பெறாதது தவறு. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு சட்ட திருத்தம், என்று கூறி உள்ளார். இதனால் 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+