ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து ஏன்? 2019-ல் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் சொன்ன 10 காரணங்கள்!
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு ஆகியவையால் பிரிவினைவாதம் , பயங்கரவாதம்தான் கிடைத்தது; மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை திங்கள்கிழமை தீர்ப்பு வழங்குகிறது.

2019-ம் ஆண்டு 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவித்த 10 முக்கியமான காரணங்கள்:
- அரசியல் சட்டத்தின் 370வது பிரிவின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்தன என்பதை யாராலும் பட்டியலிட முடியவில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.
- அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், உறவினர்களுக்கு ஆதரவான கொள்கை மற்றும் பெருமளவு ஊழல் என்பதைத் தவிர வேறு எதையும் தரவில்லை. சில மக்களிடம் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு இந்த இரு சட்டப் பிரிவுகளையும் ஆயுதங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ந்திருக்க வேண்டிய அளவுக்கு அங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது. நடைமுறையில் உள்ள இந்தக் குறைபாட்டை நீக்கிய பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களின் நிகழ்காலம் நல்லதாக மாறுவது மட்டுமின்றி, எதிர்காலமும் வளமிக்கதாக இருக்கும்.
- சட்டங்கள் உருவாக்கப்படும் போது நாடாளுமன்றத்திலும், வெளியிலும் நிறைய விவாதங்கள் நடைபெறும். நிறைய விவாதங்களும் சிந்தனை உரைகளும் இடம் பெறும். அதன் முக்கியத்துவம் மற்றும் தாக்கம் குறித்து தீவிரமான வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த நடைமுறைகளுக்குப் பிறகு உருவாக்கப்படும் சட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை தரக் கூடியவையாக இருக்கும். இருந்தபோதிலும் நாடாளுமன்றத்தில் நிறைய சட்டங்கள் உருவாக்கப்படும் நிலையில், நாட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு உருவாக்கப் படுவதில்லை என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. முந்தைய அரசுகள் கூட ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, அதே சட்டம் ஜம்மு காஷ்மீரிலும் அமல் செய்யப்படும் என்று கூறிக் கொள்ள முடியாது.
சபரிமலையில் பக்தர்கள் நெரிசலில் பெரும் துயரம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி பத்மாஶ்ரீ மரணம்!
- இந்திய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களின் பயன்களை ஜம்மு காஷ்மீரில் உள்ள 1.5 கோடிக்கும் அதிகமான மக்களால் பெற முடியாமல் போனது. நாட்டின் பிற பகுதிகளில் குழந்தைகளுக்குக் கல்வி உரிமை அமலில் உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்த உரிமை மறுக்கப்பட்டது.
- பிற மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மறுக்கப் படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் துப்புரவுப் பணியாளர்களுக்காக - சபாய் கர்மாச்சாரி சட்டம் - நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் துப்புரவுப் பணியாளர்களுக்கு இதன் பலன் மறுக்கப்பட்டுள்ளது.
- மற்ற மாநிலங்களில் தலித்களுக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அதுபோன்ற எந்தச் சட்டத்தையும் ஜம்மு காஷ்மீரில் அமல் செய்ய முடியவில்லை.
- பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உருவாக்கப் பட்டு அனைத்து மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இந்தச் சட்டம் தாள் அளவில் மட்டுமே உள்ளது.
- மற்ற மாநிலங்களில் மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதுபோன்ற எதையும் அவர்கள் கேள்விப்பட்டதே கிடையாது.
- அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35-ஏ நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பாதிப்புகளில் இருந்து ஜம்மு காஷ்மீர் விரைவில் வெளியே வந்துவிடும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு உள்ளது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications