மீனவர்கள் படுகொலை-"இந்தியாவை வெறுக்க நேரும்" என வார்னிங்! நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி, வைகோ!
டெல்லி: இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மத்திய அரசு இதனைத் தடுக்கவில்லை; தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி ஆகியோர் ஆவேசமாக குரல் கொடுத்தனர்.
லோக்சபாவில் நேற்று திமுக எம்பி கனிமொழி பேசுகையில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு 22 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையானது மொத்தம் 177 படகுகளை கைப்பற்றி வைத்துள்ளது. 22 மீனவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை தடுத்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல ராஜ்யசபாவில் பேசிய வைகோ எம்பி, நான்கு மீனவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். ஒரு மீனவரைக் கொன்றுவிட்டார்கள். தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களை ஓரவஞ்சகமாக அடிமைப்படுத்தியும், பலத்த காயங்களை ஏற்படுத்தியதற்கு சிங்களப் படைகளும், சிங்கள அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அப்போது, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ்சிங் தலைமை தாங்கும் நாற்காலியில் வந்து அமர்ந்தார். சீக்கிரம் முடியுங்கள்; சீக்கிரம் முடியுங்கள் என்று மணியை அடித்துக்கொண்டே இருந்தார். இதற்கும் ஆவேசப்பட்ட வைகோ, , நீங்கள் ஓரவஞ்சகமாகவே நடக்கிறீர்கள். வாய்ப்புக்களை மறுக்றீர்கள். சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழர்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து இந்த மோடி அரசு பாதகம் செய்கிறது. இந்த நிலைமை தொடர்ந்துகொண்டே இருந்தால், தமிழக மீனவர்களின் இளம் தலைமுறையினரிடம் இந்தியா மீது வெறுப்புத்தான் உருவாகும். இப்படி ஓரவஞ்சகமாக செயல்படத்தான் நீங்கள் இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். காலம் மாறும். தமிழக மீனவர்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் காலம் வரும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications