Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி- ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

விஜய தசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் அக்டோபர் 22, 29 தேதிகளில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகினர்.

Tamil Nadu Govt files plea against Madras HC order to allow RSS Route March in SC

அரசு தரப்பு வாதம்: இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் முழுமையான தகவல்கள் இல்லை; ஆர்.எஸ்.எஸ். இயக்க ஊர்வலம் அனுமதி கோரி இருக்கும் அதே நாளில் வேறு பல அரசியல் கட்சிகளும் போராட்டங்கள், பேரணிகள் நடத்த விண்ணப்பித்திருக்கின்றன என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்தும் பகுதியில் மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன; இந்த இயக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என தெரிவித்து வருகிறது எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.வாதம்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் ஜி.ராஜகோபால், எம்.எல்.ராஜா, கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்களது வாதத்தில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தந்தது. ஆகையால் தற்போதும் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி தரவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு என வலியுறுத்தினர்.

ஹைகோர்ட் அனுமதி: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என அனுமதி வழங்கினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு: கடந்த ஆண்டும் இதேபோல ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் அனுமதி கோரியது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+