டெல்லி பல்கலை. பாட திட்டத்தில் மீண்டும் பெண் எழுத்தாளர் படைப்புகளை சேர்க்க வேண்டும்- தங்கம் தென்னரசு
மதுரை: டெல்லி பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழக பாட புத்தகத்தில் இருந்து நீக்கியது குறித்த கேள்வி அவர் கூறுகையில்:

பள்ளி கல்லூரிகளில் பாடத் திட்டங்களுக்கு இந்த அணுகு முறையை கடைபிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, கண்டிக்கத்தக்கதும் கூட. படைப்பாளிகள், அவர்களுடைய படைப்புகளால்தான் அறியப்படுகிறார்கள். அந்தப் படைப்புகளில் உள்ள செய்திகள் மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றை நீக்கியிருப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. படைப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தான் அதை பாட புத்தகங்களில் சேர்க்கப்படுகிறது. இன்று வேறு ஒரு நோக்கத்தைக் கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்க தலித் இலக்கியத்தை கொடுத்து மிக அழகாக சிறப்பாக எல்லோரும் பெருமைப்படக் கூடிய அளவிற்கு எழுதக்கூடிய இந்தப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை நீக்கி இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று, கண்டிக்கத்தக்கது.
அவற்றை உடனடியாக மீண்டும் இடத்தில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார், விசிக தலைவர் திருமாவளவனும் தெரிவித்திருக்கிறார், எனவே டெல்லி பல்கலைக்கழகம் மீண்டும் இந்தப் பாடத்தை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்றார்.
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்த கேள்விக்கு:
மைசூரில் உள்ள கல்வெட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மதித்து அந்த அமைப்புகளை கொண்டு வருவதற்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்யும் . மேலும் அவற்றை உரிய முறையில் பாதுகாப்பதற்கும் அவற்றின் வாயிலாக அந்த கல்வெட்டு செய்திகளை அறிந்து பொது மக்களிடையே எடுத்துச் செல்லக்கூடிய முயற்சிகளை தமிழக அரசு செய்யும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications