டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் மூன்றே மாநிலங்களில் 50% கொரோனா நோயாளிகள்.. லிஸ்டில் தமிழகமும் உண்டு.. இங்குதான் கவனம் தேவை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா தற்போது அதன் மோசமான சுகாதார அவசரநிலையை கொரோனா வடிவத்தில் எதிர்கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான புதிய நோயாளிகள் பதிவாகின்றனர். இந்தியா இன்னும் "சமுதாய பரவல்" கட்டத்தில் இல்லை என்று அரசு கூறி வந்தாலும், புதிய நோயாளிகள் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து பதிவாகின்றன.

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    கடந்த ஒரு வாரத்தில், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை ரொம்ப அதிகரித்துள்ளன.

    Tamil Nadu, Maharashtra, Delhi contribute for 47% new cases in last 5 days

    நாடு முழுவதும் 21 நாள் லாக்டவுனின் கீழ் வைக்கப்பட்டுள்ளது, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன.

    மார்ச் 10 முதல் 20 வரையிலான 10 நாட்களில், இந்தியாவில், 50 முதல் 196 வரை நோயாளி எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 25க்குள், அது 606ஐ எட்டியது மற்றும் மார்ச் 31ம் தேதி, இந்தியாவில் 1,397 கோவிட் -19 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டன.

    ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்தது. இந்த சுகாதார அவசரநிலை நாட்டின் சுகாதார அமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சாதாரண காலங்களில், ஐந்து நாட்கள் என்பது ஒரு நாட்டின் வாழ்க்கையில் மிக நீண்ட காலமாக இருக்காதுதான். ஆனால் வேகமாகப் பரவும் தொற்றுநோய்களின் போது, ​​ஐந்து நாள் காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை, இந்தியாவில் கோவிட் -19 நோயாளிகள் எண்ணிக்கை 1,024 லிருந்து 2,069 ஆக உயர்ந்தது, அதாவது இந்த ஐந்து நாள் காலகட்டத்தில் இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை இரட்டிப்பாகின.

    கொரோனா: சமூக பரவலின் விளிம்பில் இந்தியா.. கூடுதல் கவனம் தேவை.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் கொரோனா: சமூக பரவலின் விளிம்பில் இந்தியா.. கூடுதல் கவனம் தேவை.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்

    ஏப்ரல் 6ம் தேதியான நேற்று நிலவரப்படி, 748 நோயாளிகள் மகாராஷ்டிராவில் உள்ளனர். தமிழகத்தில் 571, டெல்லியில் 523 நோயாளிகள் உள்ளனர். ஆக மொத்தம் சுமார் 47 சதவீத நோயாளிகள் இந்த மூன்று மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த மாநிலங்களில்தான், சுகாதாரத்துறையின் அதிக கவனம் தேவைப்படுகிறது.

    English summary
    India is currently battling its worst health emergency in the form of the coronavirus outbreak that is spreading rapidly across the country with tens of new cases being reported every day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X