டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் ஆதரவுள்ள முதல்வர்கள்.. ஸ்டாலினுக்கு டாப் 3வது இடம்: இந்தியா டுடே சர்வே

நாட்டின் முதல்வர்கள் லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளார் முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

டெல்லி: மறுபடியும் தேசிய அளவில் பேசப்பட்டுள்ளார் நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

வழக்கமாக தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகள் வெளிவருவது இயல்புதான்.. அந்த வகையில் இந்த முறையும் வெளியாகி கொண்டிருக்கிறது.

பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பிரதமர் மோடி தான் டாப்.. இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பிரதமர் மோடி தான் டாப்.. இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

நடக்க போகும் 5 மாநில தேர்தல்களில் பாஜகவே பிரதான வெற்றி பெறும் என்று சொல்லி வைத்ததுபோல் அனைத்து கணிப்புகளும் ஒரே மாதிரியாக வெளியாகி வருகின்றன..

 மூட் ஆப் தி நேஷன்

மூட் ஆப் தி நேஷன்

இந்தியா டுடே -கர்வி இணைந்து "மூட் ஆப் தி நேஷன்" என்ற தலைப்பில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்கள் மற்றும், நாடு முழுவதும் லோக்சபா தொகுதிகளில் பிரதமர் மோடி ஆட்சியின் செயல்பாடுகள், மற்றும் கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், மெகா தடுப்பூசி இயக்கம், உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதில், உபியில் 75 சதவிதம், உத்தரகாண்ட் 59%, கோவா 67%, மணிப்பூர் 73% , பஞ்சாப் 37 % பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், 13 % பேர் சராசரியாக இருப்பதாகவும் 20% பேர் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்... அதாவது பஞ்சாப் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவே இந்த கணிப்புகள் சொல்கின்றன.

 செயல்திறன்

செயல்திறன்

இந்நிலையில், இந்தியா டுடேயின் மூட் ஆஃப் தி நேஷன் கணக்கெடுப்பில், ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் முதல்வர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்... அதாவது சிறப்பாக செயல்படும் முதல்வரை தேர்வு செய்ய குழு சார்பில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.. அந்த முடிவுகளும் வெளியாகி உள்ளன.. அதில், நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் பூபேஷ் பாகேல் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்... காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் 9வது இடத்தில் உள்ளார்...

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதல் இடத்தை பெற்று வியப்பை ஏற்படுத்தி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2வது இடத்தில் உள்ளார்... இதில் 3வது இடத்தை பிடித்துள்ளது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆவார்.. 69.9 சதவீத வாக்குகளை மம்தா பானர்ஜிக்கு பொதுமக்கள் வழங்கி உள்ளனர்.. நம் முதல்வர் ஸ்டாலினுக்கு 67.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.. ஸ்டாலினுக்கு அடுத்துதான் மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே, அவருக்கு பிறகு கேரளாவின் பினராயி விஜயன், அவருக்கு பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

 சீனியர்கள்

சீனியர்கள்

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள அத்தனை பேரும் சீனியர்கள்.. இதற்கு முன்பு பலமுறை முதல்வர்களாக இருந்தவர்கள்.. அதிலும் நவீன் பட்நாயக்கை எடுத்து கொண்டால், ஒடிசா மாநில ஐந்தாவது முறையாக பொறுப்பில் உள்ளவர்.. ஒரியா மொழியே தெரியாமல் ஒடிஷாவை தன்வசம் வைத்திருப்பவர்.. மம்தாவை பற்றி சொல்லவே தேவையில்லை.. இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் வரிசையில், முதல்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின் 3வது இடத்தை பிடித்துள்ளது, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 பிரபலமான முதல்வர்

பிரபலமான முதல்வர்

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பெற்றிருந்தார்.. இந்தியா டுடே நாட்டின் மனநிலை என்ற தலைப்பில் மக்களிடம் கருத்து கணிப்பு ஒன்றினை நடத்தியது.. இதில், இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதுதான் அதில் கேட்கப்பட்டிருந்த பிரதான கேள்வி.. அதன்படி, இந்தியாவில் சொந்த மாநிலங்களில் மிகவும் பிரபலமான முதல்வராக ஸ்டாலின் 42 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்திருந்தார்..

 நிதி சுமை

நிதி சுமை

ஆட்சிக்கு வந்த அந்த 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக்கொண்ட சீரிய முயற்சிகள் இப்படி அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு ஸ்டாலினுக்கு பெருகியிருந்ததே இதற்கு காரணம்.. எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டதை நாடே உற்று கவனித்தது..

 கருணாநிதி மகன்

கருணாநிதி மகன்

ஆனால், அந்த லிஸ்ட்டில்கூட, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக இதே நவீன் பட்நாயக் 2வது இடத்தில் இருந்தார் என்பதை மறுக்க முடியாது. இப்படி, 10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்து, தொடர்ந்து பிரதான இடத்தை பெற்று வருவது, தமிழகத்தின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் முன்னேற்றத்தை தேசிய அரசியலில் திரும்பி பார்க்க வைத்து வருகிறார், முதல்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள கருணாநிதி மகன் முக ஸ்டாலின்..!

English summary
Tamilnadu CM MK Stalin is the 3rd popular CM in india, says survey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X