டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த மனு.. உச்சநீதிமன்றத்தில் பிப்.14ல் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: 12ம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்க்கும் மனு பிப்ரவரி 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவி அவர் (வயது 17). விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். ஜனவரி 19ல் விஷம் குடித்து தற்கொலை செய்துவி்ட்டார். பள்ளி, விடுதி நிர்வாகம் சார்பில் கட்டமாய மதமாற்றத்துக்கு வலியுறுத்தப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்ததாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.

Tanjore school student suicide case: Supreme Court hearing will be on February 14

இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினர் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தினர். மாணவியின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என அவரது தந்தை ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு சிபிஐ விசாரணைக்கு ஜனவரி 31ல் உத்தரவிட்டது. இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.,3ல் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் டிஜிபி சைலேந்திரபாபு மூலம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை பிப்.,14க்கு வர உள்ளது.
இதற்கிடையே, வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கும் முன் தன்தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A petition challenging the CBI probe into the suicide of 12th student is coming up for hearing in the Supreme Court on February 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X